தமிழ்நாடு அரசு துறைகளில் 10,402 SC/ST காலிபணியிடங்கள்

SC/ST காலிபணியிடங்கள் நிரப்புமாறு TNஐ தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் (NCSC) கேட்கிறது. பத்தாண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள SC/ST காலியிடங்களை நிரப்புமாறு TN ஐ NCSC கேட்கிறது. மொத்தம்  10,402 பணியிடங்கள் – 8,173 பணியிடங்கள் SC பிரிவினருக்காகவும், 2,229 பணியிடங்கள் ST பிரிவினருக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை பத்தாண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள பின்னடைவு காலியிடங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் (NCSC) பல்வேறு அரசுத் துறைகளில் SC/ST பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள 10,400-க்கும் மேற்பட்ட பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

09.01.2023 அன்று ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்டர் காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை  விரைந்து எடுக்க  உத்தரவிட்டார்.

ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 வழக்குகளை விசாரித்த பிறகு ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்டர் “SC/STகளுக்கு ஒதுக்கப்பட்ட 10,402 பின்னடைவு காலியிடங்களை மாநில அரசு  மூன்று மாத காலத்திற்குள் நிரப்ப வேண்டும். அதற்காக மூன்று மாத காலத்திற்குள் ஆவன செய்யப்படும்” என்று கூறினார். மேலும் அவர் “இந்த 10,402 பின்னடைவு காலியிடங்களில் 6,861 மற்றும் 229 பணியிடங்கள் முறையே பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கு உள்துறை மற்றும் மதுவிலக்கு துறையில் ஒதுக்கப்பட்டுள்ளது“ என்று கூறினார்.

தலைமைச் செயலர் வி.இறை அன்பு நிலுவையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணியை விரைவுபடுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இது குறித்து அனைத்து அரசுத் துறைகளின் தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பந்தப்பட்ட அரசு வட்டாரங்கள் “காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப சிறப்பு இயக்கம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை உயர் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும்“  தெரிவித்தன.

Leave a Reply

Latest Slideshows