Swachh Survekshan Awards 2023 - Platform Tamil

Swachh Survekshan Awards 2023 : Indore & Surat Cleanest Cities In India

இந்திய நாட்டின் தூய்மையான நகரங்களாக இந்தூர் மற்றும் சூரத் தேர்வு செய்யப்பட்டன, அந்த முடிவுகள் 11/01/2023 இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன. Swachh Survekshan Awards 2023 நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கினார். புதுதில்லியில் 11/01/2023 இன்று நடைபெற்ற Swachh Survekshan Awards 2023-ன் விருது விழாவில், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து விருதைப் பெற்றார். Swachh Survekshan Awards 2023-ன் இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பிரிவில் இந்தூர் மற்றும் சூரத் ஆகிய இரண்டும் முதலிடத்தைப் பிடித்தன. மேலும் Swachh Survekshan Awards-ன் இந்தியாவின் ‘சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள்’ பிரிவில் சிறப்பாகச் செயல்படும் மகாராஷ்டிரா முதல் இடத்தையும், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் இரண்டாவது இடத்தையும் பிடித்தன.

மத்திய அரசின் வருடாந்திர தூய்மைக் கணக்கெடுப்பில் நவி மும்பை மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. தொடர்ந்து ஏழாவது முறையாக இந்தூர் நகரம் தூய்மையான நகர பட்டத்தை வென்றுள்ளது. முதல் முறையாக சூரத் நகரம் கூட்டு வெற்றி பெற்றுள்ளது. முதல் இடத்தில் இந்தூரின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், இந்தூரின் துப்புரவுப் பணியாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து, மேளம் அடித்து நடனமாடத் தொடங்கினர். இந்த முறை தூய்மையான நகரம் என்ற பட்டத்தை  இந்தூர் குஜராத்தில் உள்ள சூரத்துடன் சேர்ந்து பகிர்ந்துள்ளது.

Swachh Survekshan Awards 2023 - முதல்வர் யாதவ் உரை :

இந்த நிகழ்வில் முதல்வர் யாதவ் தூய்மையின் மீதான இந்தூர் மக்களின் ஆர்வம் ஒருபோதும் குறையக்கூடாது என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் முதல்வர் யாதவ்  “தூய்மையின் ஏழாவது சொர்க்கத்தில் எங்கள் இந்தூர் நகரம் உள்ளது. தூய்மை என்பது இந்தூர் மக்களின் பழக்கமாக மாறிவிட்டது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். அவர்களின் சிந்தனையில் தூய்மை உள்ளது. இந்தூர் நகரம் மற்றும் ஒட்டுமொத்த குழுவினரும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தூய்மையின் மீதான இந்தூர் மக்களின் ஆர்வம் ஒருபோதும் குறையக்கூடாது என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று கூறினார். Swachh Survekshan Awards 2023 தரவுகளின்படி 4,447 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பங்கேற்றன மற்றும் 12 முக்கிய குடிமக்கள் பதில்கள் பெறப்பட்டன. இந்த Swachh Survekshan Awards 2023 ஆனது உலகின் மிகப்பெரிய தூய்மை கணக்கெடுப்பு என்று அரசாங்கம் கூறுகிறது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Latest Slideshows

Leave a Reply