The Microbe Entered The ISS : சர்வதேச விண்வெளி மையத்திற்குள் புகுந்த நுண்ணுயிரி

விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு அங்கு விண்வெளி வீரர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் ‘என்டோரோபாக்டர் புகன்டென்சிஸ்’ என்ற பாக்டீரியா (The Microbe Entered The ISS) நுழைந்துள்ளது. சூரிய குடும்பத்தில் பூமியைப் போல வாழக்கூடிய வேறு ஏதேனும் கிரகங்கள் உள்ளதா? என விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். விண்வெளியில் தொடர்ந்து ஆய்வுகள் நடந்துவரும் நிலையில், பல்வேறு நாடுகள் ஒத்துழைப்புடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கை விண்வெளி நிலையத்தில் பல நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து தகவல் தொடர்பு, சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பிற நடவடிக்கைகள் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், விண்வெளி வீரர்களுக்கு இது ஒரு வீடு போன்றது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு விஞ்ஞானி பட்ச் வில்மோர் ஆகியோர் இந்த விண்வெளி மையத்தை கடந்த 6-ஆம் தேதி பார்வையிட்டனர். அங்கு ஒரு வாரம் தங்கி ஆய்வு செய்து பூமிக்கு திரும்புகின்றனர். புதிய விண்கலத்தை ஆய்வு செய்வதற்காக அவர்களின் பயணம் அமைந்தது.

The Microbe Entered The ISS :

மேலும் 7 விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட காலம் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். குப்பைகள் மற்றும் சிறிய விண்கற்களே பொதுவாக விண்வெளியில் உள்ள வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். ஆனால் தற்போது புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதாவது சர்வதேச விண்வெளி நிலையத்தில் “என்டோரோபாக்டர் புகன்டென்சிஸ்” என்ற பாக்டீரியா (The Microbe Entered The ISS) உள்ளதாம். மருந்துகளுக்கு கட்டுப்படாத இந்த பாக்டீரியா, சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுச்சூழலில் மேலும் அதிக வீரியம் மிக்கதாக மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாக்டீரியாக்கள் சுவாச மண்டலத்தை பாதிக்கலாம். இந்த சூப்பர் பக்ஸ்கள் வேறொரு கிரகத்திலோ அல்லது விண்வெளியில் இருந்து வந்த உயிரினங்கள் அல்ல என்றும், விண்வெளிக்கு வந்த வீரர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்படாமல் வந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சூப்பர் பக் நாசா விஞ்ஞானிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply