Yellow Alert For Tamil Nadu : இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது

Yellow Alert For Tamil Nadu - கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது:

இந்திய வானிலை மையம் ஆனது பீகார், தமிழ்நாடு, கர்நாடகா உள் மாவட்டங்கள், உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert For Tamil Nadu) விடுத்துள்ளது. இந்த 5 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிற்பகல் நேரங்களில் வெயில் அதிகளவில் இருக்கும் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நீடித்து வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு இரண்டு நாட்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை (Yellow Alert For Tamil Nadu) விடுத்துள்ளது.

கடந்த 22/04/2024 அன்று அதிக வெப்ப அலை வீசிய நகரங்களில் இந்தியாவில் முதல் இடத்தில் புவனேஸ்வர் நகரும், இரண்டாவது இடத்தில் கடப்பாவும் மற்றும் மூன்றாவது இடத்தில் ஈரோடும் உள்ளன. ஈரோட்டில் கடந்த 22/04/2024 அன்று அதிகபட்சமாக 109.40 டிகிரி வெப்பம் பதிவாகியது மற்றும் வெப்ப அலையும் வீசியது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் குறையாமல் வெப்பம் பதிவாகி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் வெயில் கடுமையாக பதிவாகி உள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருக்கும். புதுவை, தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கடும் வெயில், அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக  மக்களுக்கு அதிக அளவில் அசௌகரியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் ஆனது தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply