100 Crore Investors Conference : தமிழ்நாட்டில் இந்த வருடம் ரூ.100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு

சென்னை :

இந்த 2024 ஆம் வருட தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னைக்கு மட்டுமின்றி வேறு பல மாவட்டங்களுக்கும் முக்கியமான பல அறிவிப்புகள் ஆனது வெளியிடப்பட்டன. குறிப்பாக பல மாவட்டங்களில் முதலீடுகள் செய்யப்படுவது தொடர்பான முக்கியமான அறிவிப்புகள் ஆனது வெளியாகின. அதன்படி இந்த வருடம் தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு (100 Crore Investors Conference) ஆனது நடத்தப்பட்டது. கோயம்புத்தூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி, வேலூர் மேலும் பல மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படுவது தொடரும். இதனால் சுமார் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஆனது உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

100 Crore Investors Conference : ஓசூரில் முதலீடுகள் - ஒரு குறிப்பு

தற்போது ஓசூரில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் மின்சார பேட்டரி வாகனங்கள் உற்பத்தி ஆனது அதிகரித்து உள்ளது. இதற்காக ஓசூரில் கோடிக்கணக்கில் முதலீடுகள் செய்யப்பட்டுகின்றது. உதாரணமாக 7614 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுக்கும், ஓலா நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது. அதன்படி  ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.

மேலும் ஓலா நிறுவனம் ஆனது 20 மெகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பூங்காவில் அமைக்க முடிவு செய்துள்ளது. இது உலகிலேயே சிப்களை உற்பத்தி செய்யும் பெரிய ஆலையாக இருக்கப் போகிறது என்று ஓலா நிறுவனம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசு சுமார் 3,111 நபர்களுக்கு இதன் மூலம் வேலை கிடைக்கும் என்று தெரிவித்து உள்ளது. கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மிகப்பெரிய ஓலா பைக் ஆலையில் ஓலா பைக் உற்பத்தி நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன உற்பத்தி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையம் ஆனது அமைக்கப்பட்டு உள்ளது.

ஓசூரில் 500 ஏக்கர் பரப்பளவில் 5,000 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்ட  யூனிட்டில் 15,000 பேர் பணிபுரிகின்றனர். இந்த ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டு  25,000-28,000 ஊழியர்கள் வரை பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓசூரில் டாடா  குழுமம் ஆனது புதிய அசெம்ப்ளி ஆலையில் 50,000+ பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 20 அசெம்பிளி லைன்கள் அமைத்து இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் அசெம்ப்ளி ஆலையை உருவாக்க உள்ளது. டாடா எலெக்ட்ரானிக்ஸ், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆக்சஸெரீஸ் ஒப்பந்த தயாரிப்பில் அதன் திறனை கணிசமாக விரிவுபடுத்த இப்போதுதான் சூழ்நிலை கைகூடி வந்துள்ளது. இந்த நிறுவனம் சமீபத்தில்தான் விஸ்ட்ரானின் ஐபோன் அசெம்பிளி ஆலையை வாங்கி உள்ளது.  முற்றிலும் ஆப்பிள் போன் உதிரிபாகங்களுக்கான இந்த புதிய ஆலையில் கூடுதலாக 35 ஆயிரம் பணியாளர்களை பணிக்கு எடுத்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply