To Boost Texas Chip Production : US $6.4 டாலர்களை Samsung-கிற்கு Texas Chip உற்பத்தியை விரிவுபடுத்த வழங்கவுள்ளது

To Boost Texas Chip Production - அமெரிக்கா ஆனது டெக்சாஸ் சிப் தயாரிப்பு வளாகத்திற்கு மானியமாக சாம்சங்கிற்கு 6.4 பில்லியன் டாலர்களை வழங்கவுள்ளது :

இது அமெரிக்காவின் சிப்மேக்கிங்கை விரிவுபடுத்துவதற்கான (To Boost Texas Chip Production) பரந்த முயற்சியின் ஒரு பகுதி ஆகும். கடந்த 15/04/2024 அன்று அமெரிக்காவின் வர்த்தகத் துறை மத்திய டெக்சாஸில் அதன் சிப் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்காக தென் கொரியாவின் சாம்சங்கிற்கு Biden Administration ஆனது 6.4 பில்லியன் டாலர் வரை மானியமாக வழங்கும் என்று தெரிவித்துள்ளது. 2026ல் முதல் தொழிற்சாலை உற்பத்தியைத் தொடங்கும் மற்றும் இரண்டாவது தொழிற்சாலை 2027ல் உற்பத்தியைத் தொடங்கும் என்று தெரிவித்தனர்.

மேலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பிரத்யேகமான ஒரு தொழிற்சாலையை தொடங்கும். சிப் பாகங்களைச் சுற்றியுள்ள பேக்கேஜிங்கிற்கான வசதியையும் தொடங்கும். வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ, “இந்த மானியம் ஆனது இரண்டு சிப் தயாரிப்பு வசதிகள், ஒரு ஆராய்ச்சி மையம் மற்றும் பேக்கேஜிங் வசதி ஆகியவற்றை ஆதரிக்கும். மேலும் இது சாம்சங்கின் ஆஸ்டின், டெக்சாஸ், செமிகண்டக்டர் வசதியை விரிவுபடுத்த உதவும். அமெரிக்காவில் இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் 20% முன்னணி எட்ஜ் சிப்களை உற்பத்தி செய்ய  நினைக்கும் (To Boost Texas Chip Production) எங்கள் இலக்கை அடைய இது எங்களை வழிநடத்தும். குறைந்தபட்சம் 17,000 கட்டுமான வேலைகளையும் 4,500க்கும் மேற்பட்ட உற்பத்தி வேலைகளையும் இந்த திட்டமானது உருவாக்கும்” என்று கூறினார்.

அமெரிக்காவின் இந்த முதலீடு ஆனது சிப் தயாரிப்பில் சீனா மற்றும் தைவானைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும். மேலும் இந்த நிதியானது விண்வெளி, பாதுகாப்பு மற்றும் வாகனத் தொழில்களுக்கான சிப் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் தேசிய பாதுகாப்பை மேம்படுத்தும் என்று நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ, “இந்த முதலீடுகள் ஆனது செமிகண்டக்டர் வடிவமைப்பில் மட்டுமல்லாமல், அதன்  உற்பத்தி, மேம்பட்ட பேக்கேஜிங் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் அமெரிக்காவை மீண்டும் உலகை வழிநடத்த அனுமதிக்கும்” என்று கூறினார்.

வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார ஆலோசகர் லேல் பிரைனார்ட், “முன்னணி-எட்ஜ் சிப் உற்பத்தி அமெரிக்காவிற்கு திரும்புவது எங்கள் குறைக்கடத்தி துறையில் ஒரு முக்கிய புதிய அத்தியாயமாகும்” என்று கூறினார். இந்த தசாப்தத்தின் இறுதியில் அதன் டெக்சாஸ் வசதிகளை நிர்மாணிப்பதற்கும் விரிவாக்குவதற்கும் சாம்சங் நிறுவனம் ஆனது தோராயமாக $45 பில்லியன் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மூத்த நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 15/04/2024 அன்று வணிகத் துறையால் அறிவிக்கப்பட்ட இந்த நிதியானது, தனியார் பணத்துடன் $40 பில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியின் மத்தியில் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான அணுகல் ஒரு முக்கிய தேசிய பாதுகாப்பு  ஆகும்.

Latest Slideshows

Leave a Reply