Fertility Center At Government Hospital : எழும்பூர் அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம்

சென்னை Egmore Government Hospital-ல் அதிநவீன முறையில் Free Fertility Center ஆனது ரூ.6.97 கோடி மதிப்பில் (Fertility Center At Government Hospital) கட்டப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், செயற்கை கருத்தரிப்பு மையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ளது. தனியாருக்கு நிகரான சிகிச்சை உபகரணங்கள் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த செயற்கை கருத்தரித்தல் மையத்தை திறந்து வைத்தார்.

Fertility Center At Government Hospital - எழும்பூர் அரசு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் :

பல தம்பதியினர் பிள்ளைப்பேறு இல்லாமல் சமூகத்திலும் மற்றும் குடும்பங்களிலும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் மற்றும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பணவசதி படைத்த தம்பதியினர் பலரும் குழந்தையின் வரவை எதிர்நோக்கி பல தனியார் மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்காக தங்களது பணத்தை அதிகமாக செலவு செய்கிறார்கள். அவ்வளவு மருத்துவசெலவு செய்ய முடியாத பணவசதி இல்லாத தம்பதியினர் பலரும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையை அரசே தொடங்கினால் நன்றாக இருக்கும் என்ற ஏக்கத்தில் நீண்ட காலமாக இருந்து வந்தனர். நீண்ட காலமாக மக்கள் மனதில் இருந்து வந்த ஏக்கத்தை நிவர்த்தி செய்யும் வகையில், எழும்பூர் அரசு மருத்துவமனையில் அதிநவீன செயற்கை கருத்தரித்தல் மையம் (Fertility Center At Government Hospital) தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் ரூ.10 லட்சம் செலவாகும் நிலையில், எழும்பூர் அரசு மருத்துவமனையில் அதிநவீன செயற்கை கருத்தரித்தல் மையத்தில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எழும்பூர் அரசு மருத்துவமனையின் தாய் சேய் நல இயக்குநர் கலைவாணி உரை :

எழும்பூர் அரசு மருத்துவமனையின் தாய் சேய் நல இயக்குநர் கலைவாணி, “ரூ.6.97 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த செயற்கை கருத்தரிப்பு மையத்தில் கருத்தரிக்காததற்கான காரணம் என்னவென்று கண்டறியப்பட்டு, அதற்கேற்றாற் போல சிகிச்சைகள் (Fertility Center At Government Hospital) ஆனது அளிக்கப்படும். இதன் முதற்கட்டத்தில் 50 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படும். இந்த மையத்தில் இளம் வயதினருக்கு பல்வேறு நிலைகளில் கருத்தரிப்பு சிகிச்சையும் மற்றும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சையாக நல்ல சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்படும். தனியாருக்கு நிகரான சிகிச்சை உபகரணங்கள் இந்த மையத்தில் உள்ளன” என்று கூறினார்.

மேலும் அவர், “இந்த மையத்தில் சிகிச்சை ஆனது வழங்கப்படும் முன்னர் பெண்ணின் கருப்பை, கருக் குழாய், மாதவிடாய் சுழற்சி, கருவுறுதலுக்கான சாதகமான சூழல், ஹார்மோன் சுரப்பு உள்ளிட்ட முழுத்தகவலும் சேகரிக்கப்படும். கருக்குழாய், கருப்பை, ஹார்மோன் சுரப்பு இவற்றில் பெண்களுக்கு குறைபாடு ஏற்படும்போது குழந்தை பிறப்பு ஏற்படுவதில் பாதிப்பு உண்டாகிறது. பிரச்சனை ஏற்படுத்தும். கருக்குழாய் கட்டி சரிசெய்யப்பட இங்கு வசதியுள்ளது. கருக்குழாயில் பிளாக் ஆனது இருந்தால், அதை அகற்றும் வசதி இங்கு உள்ளது. மேலும், உயிருள்ள விந்தணுக்களை தேர்வு செய்து கருப்பையில் வைத்து கருவை உண்டாக்கும் வசதி இங்கு உள்ளது” என்று கூறினார். அடுத்ததாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இரண்டாவது கருத்தரிப்பு மையம் தொடங்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply