Happy New Year 2024 - வா வா வசந்தமே... உயர் பெற உலகமே...

Happy New Year 2024 : புதுவருடம் என்பது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சீர் தூக்கி ஆராய்ந்து எதிர்காலத்தை நிறைவுடன் அமைப்பதாகும். ஒரு ஆண்டு முழுவதும் ஓட்டத்தில் களைப்படைந்த மனிதர்களுக்கு தங்களது உள்ளத்தைப் புதுப்பித்தல் அவசியமானது ஆகும். அதன் அடிப்படையிலே புதுவருடக் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

வாழ்வின் புதுப்பித்தலையிட்டு மகிழ்ச்சி கொள்ளுதல், தோல்விகளாலும் கஷ்டங்களாலும் நலிந்தவர்களுக்கு வாழ்வில் புது நம்பிக்கை ஏற்படுத்துவதும் மற்றும் சமய சமூக கலை ரீதியாகவும் சமூகத்தை ஒன்றுபடுத்தி உறுதிப்படுத்துவதும் புதுவருடத்தின் முக்கியமான குறிக்கோள்களாகும். உலகம் முழுவதும் ஜனவரி முதலாம் தேதி புதுவருடம் கொண்டாடப்படுவது என்பது தொன்று தொட்டு வரும் மிகமிகப் பழமையான பண்பாடு ஆகும். பொதுவாக அனைவரும் கொண்டாடும் பொதுவான முறையை தவிர்த்து இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பண்பாடும் தனக்கெனத் தனியாகப் புதுவருடக் கணிப்பு முறையையும் மற்றும் கொண்டாட்டங்களையும் கொண்டுள்ளன.

New Year வரலாற்று பதிவுகள் :

ஜனவரி மாதம் ஆனது ரோமர்களின் தெய்வமான ஜானுஸ் தெய்வத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டே உருவாகியது. ஜானுஸ் என்பது வாசல், கதவுகள், ஆரம்பம் ஆகியவற்றின் தெய்வமாகும். அதற்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒன்று முற்பக்கத்தை பார்ப்பது மற்றது பிற்பக்கத்தை நோக்குவது. கிமு இரண்டாயிரம் ஆண்டளவில், அதாவது சுமார் நாலாயிரம் வருடங்களின் முன்னர் பபிலோனியாவில் புதுவருடம் ஆனது வசந்த கால முதல் அமாவாசையில் கொண்டாடப்பட்டது. பண்டைய வரலாற்று பதிவுகளில் அரசாண்ட அரச குலங்களின் ஆட்சியின் படி வருடங்களை எண்ணும் முறை ஒன்று காணப்பட்டது. பபிலோனிய புதுவருட கொண்டாட்டங்கள் 11 தினங்கள் நீடித்தன. ஒவ்வொரு நாள் கொண்டாட்டமும் தனக்கெனத் தனியான சிறப்புக் கொண்டமைந்தது.

ரோமர்களது நாட்காட்டிகள் தொடர்ந்து பல்வேறு உரோம சக்கரவர்த்திகளால் மாற்றப்பட்டு வந்த வண்ணம் இருந்தது. அது சூரியனது போக்கை அடிப்படையாகக் கொண்டு நாட்காட்டியை முறைப்படுத்தும் நோக்கத்துடன் கிமு 153ல் ரோம செனட் ஜனவரி முதலாம் தேதியை வருடப்பிறப்பாக பிரகடனப்படுத்தியது. கிபி முதல் நூற்றாண்டு வரை ரோமர்கள் தொடர்ந்து புதுவருடத்தைக் கொண்டாடி வந்த போதும் கடந்த 400 ஆண்டுகளாகவே மேற்கத்தைய நாடுகள் இந்த நாளை புதுவருட  கொண்டாட்டமாக ஏற்றுள்ளன. சூரியனின் போக்கை அடிப்படையாகக் கொண்டே புதுவருடம் கணிக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் பூமி சூரியனை வலம் வரும்போது சூரியன் பூமத்திய ரேகைக்கு நேராக இரண்டு தடவை வருகின்றது. ஒன்று பங்குனி சித்திரைக் காலத்தில் வருவது, மற்றது புரட்டாசி ஐப்பசிக் காலத்தில் வருவது ஆகும். இரண்டாவது காலகட்டம் மழை காலத்தின் ஆரம்பம் ஆகும். அதனால் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள நாடுகள் சித்திரையைத் தமது புத்தாண்டாகக் கொண்டுள்ளனர்.

இந்தக்காலத்தில் குளிர் நீங்கி சூரியனது கதிர்கள் ஆனது நேராக பூமியில் படிய ஆரம்பிக்கின்றன. அதன் காரணமாக அத்துடன் வசந்தகாலமும் தாவர உலகில் புது உயிர்ப்பும் ஏற்படுகின்றன. அதாவது இலைகளை உதிர்த்து நின்ற மரங்கள்  மற்றும் தாவரங்கள் புது துளிர் வந்து மலர ஆரம்பிக்கின்றன. இது ஒரு புது வசந்தகால ஆரம்பமாகக் கொள்ளப்பட்டது. வசந்த காலம் என்பது மறுமலர்ச்சிக்குரிய பருவம் என்பதால் புதிய பயிர்களை நடுதல், மரங்கள் மலர்தல் ஆகியன இப்பருவத்தில் ஏற்படுகின்றன. குளிரில் உறைந்து கிடந்த இயற்கை வசந்த காலத்தில் புதுமலர்ச்சி பெறுவதைக் கவனித்த மனிதன் தனக்கும் அக்காலத்தில் ஒருவித மீளமைப்பு இடம் பெறுவதாகக் நினைத்து அக்காலத்தில் புதுவருடம் பிறப்பதாகக் கொண்டான். அதாவது ஒரு சுழற்சியின் ஆரம்பமாக அதனைக் கருதினான்.

மேற்குலக ஜோதிடப்படியும் மற்றும் இந்திய ஜோதிட முறையிலும் இப்பிரபஞ்சம் முழுவதும் ஒரு மனிதனாகக் கருதப்படுகிறது. அதன்படி ராசி மண்டலம் ஆனது புருஷனின் உடல் அம்சங்களாகக் கொள்ளப்படுகிறது. அவனது தலையாக முதலாவது ராசியான மேஷம் மற்றும் அவனது பாதங்களாக கடைசி ராசியான மீனம் சொல்லப்படுகிறது. இடையில் உள்ள ஏனைய ராசிகள் ஆனது அவனது ஏனைய அங்கங்களாக உள்ளன. இதன்படி காலத்தைக் கணிக்க ஆதாரமாகவுள்ள சூரியன் தலையான மேட ராசியில் வரும் காலத்தில் வருடம் பிறப்பதாக நமது முன்னோர் கணித்திருக்கலாம்.

Happy New Year கொண்டாட்டம் :

எப்போதும் வசந்த கால தொடக்கமே வருடத் தொடக்கமாகக் கருதப்படுவதால் இக்காலத்தில் மனிதரும் புதுக்கால கட்டத்தில் நுழைவதாகக் கருதி புது வருடம் அப்போது ஆரம்பிப்பதாக நினைத்துக் கொண்டனர். புதுப்பித்தலைக் குறிக்கும் வண்ணம் தமது வீடுகளைத் துப்புரவு செய்வார்கள். புதுவருடத்திற்கு முந்திய நாள் குடும்பங்கள் ஒன்று கூடி விருந்துண்பதுடன் இரவு நீண்ட நேரம் விழித்திருப்பார்கள். இவ்வாறு விழித்திருப்பது தமது முதியவரின் வாழ்நானை நீடிக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. புதுவருடத்தன்று தம்மிடமுள்ள சிறந்த ஆடைகளை அணிந்து விடியலில் கோயிலுக்குச் சென்று தெய்வ காட்சியை காண்பதுடன் அவர்களது கொண்டாட்டம் ஆரம்பிக்கின்றது. குடும்பத்திலுள்ள இளையவர்கள் முதியவர்களை வணங்குவார்கள். முதியவர்கள் அவர்களை வாழ்த்தி பணம் அல்லது பரிசு வழங்குவார்கள். தம்முள் ஒருவருக்கொருவர் சிறு பரிசுகளைப் பரிமாறிக் கொள்வார்கள். பின்னர் வறியவர்களுக்கு நாணயங்கள் வழங்குவார்கள் மற்றும் மக்கள் புத்தாடை அணிந்து குடும்ப அங்கத்தவர்களுடனும் நண்பர்களுடனும் விருந்துண்பார்கள்.

உலகம் முழுவதும் வருடம் பிறந்ததும் உண்ணும் முதல் உணவு முழுவருடமும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்ற மரபு விசேட உணவருந்துதல், கோயிலுக்குச் சென்று பஞ்சாங்கஸ்ரவணம் எனப்படும் புதுவருட பஞ்சாங்கத்தின் விளக்கங்களைக் கேட்டல் முக்கிய கொண்டாட்டங்களாக அமைகின்றன. பண்டைய ரோமர்கள் வசந்த காலத்தில் புதிதாகத் துளிர்க்கப் பெற்ற புனித மரங்களின் கிளைகளை ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கினர். பின்னர் இது பொன் முலாம் பூசப்பட்ட ஜானுஸின் படம் பொறிக்கப்பட்ட நாணயங்களைக் ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்குவதாக மாறியது.

Happy New Year 2024 - புதுவருடம் புதிய தொடக்கம் :

Happy New Year 2024 : சிலருக்கு புது வருடங்கள் அனைத்தும் புதிய தொடக்கத்திற்கான ஆரம்ப புள்ளியாக இருக்கலாம். சிலருக்கு, இது எப்போதும் போன்ற ஒரு வருடம்தான் என்று தோன்றலாம். சிலருக்கு இந்த புது வருடம் பல புதிய வாய்ப்புகளுக்கான வாயிலாக தோன்றலாம். எப்படி ஒவ்வொருவருக்கும் புது வருடம் என்றால் ஒவ்வொரு கருத்துக்கள் இருந்தாலும் புது வருடம் பிறக்கும் போது மட்டும் யாரும் கொண்டாடுவதை நிறுத்துவதில்லை. மாற வேண்டும் என்று மனதில் எண்ணம் வைத்து உங்களது புது வருடத்தை ஆரம்பிக்கலாம். நல்லதை பார்த்தால், அதை செய்தவரை மனதார பாராட்டுவோம். அத்துடன் கடந்த வருடத்தில் செய்த தவறுகளை நினைத்து எதிர்காலத்தில் அவற்றைச் செய்யாது வாழ்க்கையை நல்லமுறையில் அமைப்போம்.

Latest Slideshows

Leave a Reply