Hibiscus Flower : செம்பருத்தி பூவின் மருத்துவ நன்மைகள்

  • செம்பருத்தி பூ நமக்கு பல நன்மைகளை தருகிறது. இரத்த அழுத்தத்தை குறைப்பதில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை இதன் மருத்துவ குணங்கள் உள்ளன. Hibiscus Flower பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன், நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. செம்பருத்தி பூவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அந்தோசயனின்கள் மற்றும் ப்ளோவனாய்டுகள் உள்ளன.
  • இது இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இந்த செம்பருத்தி இந்தியாவில் மிகவும் பொதுவான மலர்களில் ஒன்றாகும். செம்பருத்தி டீயாகவும் எடுத்துக் கொள்ளலாம். கொழுப்பை கரைக்க உதவுகிறது. இந்நிலையில் செம்பருத்தி பூவின் சிறந்த பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

Hibiscus Flower Benefits - செம்பருத்தி பூவின் நன்மைகள்

இரத்த சர்க்கரை அளவை குறைகிறது

உயர் இரத்த சர்க்கரை உங்கள் நரம்புகள், கண்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கலாம். மேலும், இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது. எனவே 21 நாட்கள் செம்பருத்தி சாறு குடித்து வர இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது.

இரத்த கொலஸ்ட்ரால் அளவை

இரத்த நாளங்களை அடைக்கும் கொழுப்பு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த செம்பருத்தி பூவின் (Hibiscus Flower) சாற்றை பிழிந்து வாய்வழியாக உட்கொள்ளும்போது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும். இது கொலஸ்ட்ரால் அளவை 22% வரை குறைக்கிறது. இது நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை அதிகரிக்கிறது. இந்த பூவில் உள்ள சபோனின் கொழுப்புகளை உறிஞ்சுவதை தடுக்கிறது.

கூந்தல் வளர்ச்சி

செம்பருத்திப் பூவின் (Hibiscus Flower) இலைகளால் செய்யப்பட்ட பேஸ்ட்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. முடியை பலப்படுத்துகிறது. எனவே செம்பருத்திப் பூவைக் கொண்டு ஷாம்பு தயாரிப்பது உங்கள் முடி வளர்ச்சிக்கு சிறந்த ஒன்றாகும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

இது நோயெதிர்ப்பு மண்டலத்தை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது. செம்பருத்தி பூவின் (Hibiscus Flower) சில மருத்துவ குணங்கள் மனித செல்களில் உள்ள டி செல்கள் மற்றும் பி செல்களை தூண்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே தினமும் 1 கப் செம்பருத்தி டீ குடிப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

சரும புற்றுநோயை தடுக்கிறது

சருமத்தில் அதிக சூரிய ஒளிபடும் போது தோல் புற்றுநோய் வர அதிக வாய்ப்பு உள்ளது. எனவே செம்பருத்தி நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. செம்பருத்தி பூவின் சாற்றை பருகுவதன் மூலம் தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு பெறலாம். சரும செல்கள் சேதமடையாமல் தடுக்கிறது. எனவே செம்பருத்திப் பூவை (Hibiscus Flower) அன்றாட உணவில் சேர்த்து பயன்பெறுவோம்.

Latest Slideshows

Leave a Reply