International Museum Day : சிறப்புமிக்க சர்வதேச அருங்காட்சியக தினம்

 உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் ‘சர்வதேச அருங்காட்சியக தினம்’ (International Museum Day) மே மாதம் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக  உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் தேசிய அருங்காட்சியகங்கள் ஆனது  காணப்படுகின்றன. இன்றைய காலக்கட்டத்தில் உலகில் பல்வேறு நாடுகளில் தனியார் அருங்காட்சியகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நவீன உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ஆனது லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியம் ஆகும். ஒரு தேசத்தின் மற்றும் ஒரு சமூகத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகம் முக்கிய பங்களிக்கிறது. கால காலமாக ஏற்படும் வரலாற்று மாற்றங்களின் சாட்சியாக விளங்குகிறது. 1977ஆம் ஆண்டு முதல் மக்களுக்கு அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கும், மேலும் இது பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்கும், சர்வதேச அருங்காட்சியக தினம் ஆனது உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது.

இந்த சர்வதேச அருங்காட்சியக தின கொண்டாட்டம் (International Museum Day) ஆனது ஒரு நாள், வாரக் கடைசி நாட்கள்  மற்றும் முழு வாரம் என்று வசதிக்கேற்றபடி கொண்டாடப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு 158 நாடுகள், 37000 அருங்காட்சியகங்கள் இந்த சர்வதேச அருங்காட்சியக தினத்தில் கலந்து கொண்டன. இந்த சர்வதேச அருங்காட்சியக தின நாட்களில் அருங்காட்சியகங்களில், நுழைவு கட்டணத்தில் தள்ளுபடி  வழங்கப்படுகிறது. மேலும் கருப்பொருளைச் சார்ந்த காட்சிப் பொருட்கள் மற்றும் கருத்தரங்குகள் ஆனது நடத்தப்படுகின்றன. மாணவர்களுக்கென்று பிரத்தியேகமான பயிற்சி அரங்குகள் ஆனது பெரும்பான்மையான அருங்காட்சியகங்களில் இருக்கும். ஒவ்வொரு வருடமும் இதற்கான கருப்பொருள் இதன் ஆலோசனைக் குழுவினால் தீர்மானிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும், இந்த நாளுக்கென்று ஒரு சிறப்பு கருப்பொருள் ஆனது இதன் ஆலோசனைக் குழுவினால் தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி இந்த 2024ம் வருடத்திற்கான கருப்பொருள் ஆனது ‘கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அருங்காட்சியகங்கள்’ ஆகும்.

அருங்காட்சியகங்கள் - வரலாற்றுக் களஞ்சியங்கள்

ஒரு நாட்டினுடைய வாழ்க்கை முறை, அதன் கடந்த கால நாகரிகம், வரலாற்று சம்பந்தமானப் பொருட்கள், கலை மற்றும் கட்டடக் கலைகள் என பலவற்றை அருங்காட்சியகங்களில் காண முடியும்.  எனவே அருங்காட்சியகங்கள் கல்வி கற்பிக்கும் மையங்கள் என்று நாம் சொல்லலாம்.

நமக்குத் தெரியாதனவற்றை வலைத்தளம் பல்கிப் பெருகியுள்ள இந்த காலகட்டத்தில், நாம் வலைத்தளத்தில் தேடிக் கண்டு பிடிக்கலாம். ஆனால், அருங்காட்சியகங்களில் உள்ள காட்சிப் பொருட்கள் மற்றும் விளக்கங்கள் மூலம் அவற்றை சரியா, தவறா என்று அறிவை வளர்த்துக் கொள்ளலாம். அருங்காட்சியகங்களை வரலாற்றுக் களஞ்சியங்கள் என்று சொல்லலாம்.

அருங்காட்சியகங்கள் நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள் என்று நாம் சொல்லலாம். நெல்லை மாவட்டத்தில் உள்ள அறிவியல் மையத்தில் தற்போது  சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி ‘எனது பழங்கால பொருட்கள் சேகரிப்பு’ என்ற கண்காட்சி  ஆனது நடைபெற்று வருகின்றது.

Latest Slideshows

Leave a Reply