IPL 2023 RCB vs GT: குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் முழுமையான வெற்றியை பெற்றது.

IPL 2023 RCB vs GT: குஜராத் டைட்டன்ஸ் IX

விருத்திமான் சாஹா, சுப்மன் கில், விஜய் சங்கர், தசுன் ஷனக, டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா, ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோஹித் சர்மா, யாஷ் தயாள்.

IPL 2023 RCB vs GT: ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு IX

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னெல், வைஷாக் விஜய் குமார், கரண் சர்மா, முகமது சிராஜ். ஹிமான்ஷு ஷர்மா.

பெங்களூரில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்
அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

IPL 2023 RCB vs GT - பெங்களூரு அணியின் தொடக்கம்

ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் இருவரும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் டு பிளெசிஸ் 19 பந்துகளில் 28 ரன்களை குவித்தார். இவரை தொடர்ந்து விளையாடிய மேக்ஸ்வெல் 5 பந்துகளில் 11 ரன்களை குவித்தார். அடுத்தடுத்து விளையாடிய வீரர்கள் ஏமாற்றத்தை அளித்து வெளியேறினர். தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 61 பந்துகளில் சதம் அடித்து 101 ரன்களும், அனுஜ் ராவத் 15 பந்துகளில் 23 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு அணி கொடுக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 197 ரன்களை குவித்தது.

IPL 2023 RCB vs GT - குஜராத் அணியின் வெற்றி

இதனைத் தொடர்ந்து 197 ரன்களை நோக்கி மும்பை குஜராத் விளையாடிய தொடங்கியது. குஜராத் அணியில் விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் விருத்திமான் சாஹா 14 பந்துகளுக்கு 12 ரன்களை எடுத்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய விஜய் சங்கர், சுப்மன் கில்லுடன் இணைந்து இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர் இதில் விஜய் சங்கர் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 52 பந்துகளில் சதம் அடித்து ரன்களும், ராகுல் தெவாட்டியா5 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் அணி 19.1 ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 198 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

Latest Slideshows

Leave a Reply