Jonita Gandhi Performed IPL Final: ஐபிஎல் நிறைவு விழாவில் பாடும் ஜோனிடா காந்தி

கிரிக்கெட்டையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது. கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளை மணப்பது. கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை சினிமா ஆவது. கிரிக்கெட் ப்ரமோஷனுக்கு சினிமா பயன்படுவது என இப்படி ஏகப்பட்டது உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை ( 28/05/2023 ) நடைபெற உள்ள நிலையில், இந்தப் போட்டியின் நிறைவு விழாவில் ‘அரபிக்குத்து’ உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பாடகி ‘ஜோனிடா காந்தி’ பாட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோனிடா காந்தி

சென்னை எஸ்பிரஸ் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் ஜோனிடா காந்தி. செல்லம்மா செல்லம்மா, அனிருத்துடன் பிரைவேட் பார்ட்டி உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி ஜோனிதா காந்தி, ஐபிஎல் இறுதிப் போட்டியின் நிறைவு விழாவில் பாடப்போவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையில் ஏகப்பட்ட இந்தி படங்களுக்கு பாடல்கள் பாடி வந்த ஜோனிடா காந்தி, தமிழிலும் ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான ஓகே கண்மணி படத்தில் ‘மெண்டல் மைண்ட்’ பாடல் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி ஆனார். அனிருத் இசையில் கோலமாவு கோகிலா படத்தின் கண்ணே கண்ணே பாடலைப் பாடிய ஜோனிடா காந்தி. ஏ.ஆர். ரகுமான் இசையில் சர்கார் படத்தில் இடம்பெற்ற ஒஎம்ஜி பொண்ணு பாடலையும் பாடியுள்ளார். சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்திற்காக அனிருத்துடன் இணைந்து ஆட்டம் போட்டபடி வெளியான செல்லம்மா செல்லம்மா லிரிக் வீடியோவில், இதுதான் ஜோனிடா காந்தியா என ரசிகர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். அதன்பிறகு, பல பாடல்களைப் பாடி வரும் ஜோனிடா காந்தி இந்தியா முழுவதும் தமிழ், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத் என பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார்.

ஐ.பி.எல் நிறைவு விழா

16வது ஐபிஎல் லீக் சுற்றின் முடிவில் லீக்கில் முதல் 4 இடங்களைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. முதல் தகுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 10வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இதையடுத்து நேற்று இரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டிக்கான 2வது குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது. நாளை 28ம் தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகிறது. இந்நிலையில், ஐபிஎல் நிறைவு விழாவில் பாடகி ஜோனிடா காந்தி பாடலை பாடவுள்ளார். இதனை ஐபிஎல் நிர்வாகம் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் ஒரு போஸ்டரைப் பகிர்ந்து தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply