Kazhuvethi Moorkan Movie Review: கழுவேத்தி மூர்க்கன் திரை விமர்சனம்

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். இந்த படத்தை ராட்சசி படத்தை இயக்கிய இயக்குனர் கௌதமராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் முனீஸ்காந்த், சந்தோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கழுவேத்தி மூர்க்கன் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அருள்நிதி கிராமத்து நாயகனாக நடித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழகத்தில் வெயிட்டுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது காணலாம்.

கதை சுருக்கம்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை அடிநாதமாக எடுத்துக்கொண்டுகழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இரு நண்பர்கள். அவர்கள் வாழ்க்கையில் சாதியின் தாக்கமும், அதிகார அரசியலும் எந்த அளவுக்கு விளையாடுகிறது என்பதை விரிவாகச் படமாக்கியுள்ளனர்.

அருள்நிதியும் சந்தோஷ் பிரதாபும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். உயர்ந்த சமூகத்தினர் என்று சொல்லுபவர்கள் சந்தோஷ் பிரதாப் சமூகத்தை ஒதுக்கி வைத்து வருகின்றனர். ஆனால் அருள்நிதி எப்போதும் நண்பனுக்காக துணை நிற்கிறான். யாரேனும் ஒருவர் நண்பனை அவமானப்படுத்தினாலோ அல்லது அடித்தாலோ அவர்களை தும்சம் செய்து விடுவார். ஒரு கட்டத்தில், தன் சமூக இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்த சந்தோஷ் பிரதாப் கொல்லப்படுகிறார். பழி அருள்நிதி மீது விழுகிறது. இதற்குப் பிறகு என்ன நடந்தது? கொலையை அருள்நிதி செய்தாரா? அதற்கு பின் இருக்கும் சூழ்ச்சி மற்றும் அரசியல் என்ன? என்பதை இயக்குனர் திரைக்கதையின் மூலம் நகர்த்தியுள்ளார்.

விமர்சனம் (Kazhuvethi Moorkan Movie Review)

சாதி ஆதிக்கமும் பதவி அரசியலும் என்னவெல்லாம் செய்யும் என்று சொல்லியுள்ளனர். அதற்கு படத்தில் உள்ள சில காட்சிகளும் சில வசனங்களும் உறுதுணையாக உள்ளன. எந்த சமூகமாக இருந்தாலும் அதுலயும் உட்பிரிவில் ஏற்றத்தாழ்வு இருக்கு, உங்களுக்கு எதிரி யாரென தெரியல, கல்வி மட்டும் தான் உன்னை உயர்த்தும் என்பதை திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கௌதமராஜ். நடிகர்களைப் பொறுத்தவரை அனைவரும் தங்களுடைய கதாபாத்திரங்களை கச்சிதமாக நடித்துள்ளனர். குறிப்பாக மூர்க்கசாமி வேடத்தில் அருள்நிதியும், பூமி வேடத்தில் சந்தோஷ் பிரதாப்பும் பொருந்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சரத் லோஹிதஸ்வா கதாபாத்திரங்களும் ரசிக்க வைக்கின்றன.

படத்தின் முதல் பாதி பெரும்பாலும் நாடகத்தன்மை கொண்டதாகவே தெரிகிறது. மேலும் படத்தில் காதல் காட்சிகள் ஏன் காதலி எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது. படத்தில் கதாப்பத்திரம் இல்லாவிட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. படத்தில் சொல்ல முயற்சித்திருக்கும் கருத்துக்கள் காட்சிகளாகவே கடந்து செல்கிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி சிறப்பாக இருந்தாலும், அதில் பல லாஜிக் மீறல்கள் உள்ளன. மேலும் படத்தின் பின்னணி இசைக்கு டி.இமான் உதவ முயற்சித்துள்ளார். படம் முழுக்க இருக்கும் சிறிய சஸ்பென்ஸ், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் எதிர்பாராத கிளைமேக்ஸ் ஆகியவை படத்திற்கு ப்ளஸாக உள்ளது. இந்த படம் நிறைகளும் குறைகளுமாக இருந்தாலும் பரவாயில்லை என சொல்ல வைக்கிறது.

Latest Slideshows

Leave a Reply