Maamannan Box Office Collection: பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் மாமன்னன்! 9 நாளில் இவ்வளவு கோடியா?

கடந்த வாரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தின் வெற்றி விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘மாமன்னன்’. இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, லால் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 29 ஆம் தேதி பக்ரீத் வெளியீடாக வெளியானது. உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் தான் இயக்க வேண்டும் என்ற முடிவில் இந்த படத்தில் இணைந்தார். கடந்த வாரம் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் வடிவேலுவின் ‘மாமன்னன்’ கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரசியல் அதிகாரத்தில் இருக்கும்போதே சாதிரீதியாக அடக்குமுறைக்கு ஆளாகும் ‘மாமன்னன்’ தனது மகனின் விருப்பப்படி எப்படி சுயமரியாதைக்காரனாக மாறுகிறான் என்பதை மாரி செல்வராஜ் அழுத்தமாக சித்தரித்திருக்கிறார். தனது முந்தைய படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன் போலவே இப்படத்திலும் சமூக நீதியை அழுத்தமாக பேசியுள்ளார். இதனால் படத்திற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மாமன்னன் படத்தின் வரவேற்பு மற்றும் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

Maamannan Box Office Collection - 52 கோடி வசூல்

மாமன்னன் திரைப்படம் வெற்றியடைந்த நிலையில், படக்குழுவினர் நேற்று சென்னையில் நன்றியை தெரிவித்தனர். விழாவில் பேசிய உதயநிதி, எனது முதல் படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது கடைசிப் படமான மாமன்னனுக்கும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. 510 திரையில் வெளியிட்டோம். இப்படம் தற்போது இரண்டாவது வாரத்தில் 470 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்வளவு அன்பான வரவேற்பு அளித்த ரசிகர்களுக்கு நன்றி. ‘மாமன்னன்’ திரைப்படமானது வெளியான 9 நாளில் ரூ. 52 கோடியை வசூல் செய்துள்ளது. எனது படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் இது தான் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் பேசிய உதயநிதி படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பலவற்றை கலாய்த்து நகைச்சுவையாக பேசினார்.

பிரபலங்களின் பேச்சு

* நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், படங்களில் பெண் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்தப் படத்தில் கொடுத்தது போல் எதிர்காலத்திலும் பெண் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

* வடிவேலு பேசுகையில் இந்த படத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை இல்லை என்று வடிவேலு கூறியுள்ளார். நடப்பதில் கூட நகைச்சுவை இருக்கக் கூடாது என்று உதயநிதி கூறியதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து படத்தில் வரும் கட்சியை குறிப்பிட்டு தன்னுடைய பாணியில் நகைச்சுவையாக கூறினார்.

* இறுதியாக இயக்குநர் மாரி செல்வராஜ், படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதன்பிறகு வாழ்க்கையில் பலமுறை தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாகவும், ஒரு நாள் அதற்கு முயற்சித்தபோது வடிவேலுவின் நகைச்சுவையைப் பார்த்து தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில் தமிழில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட வரும் ‘மாமன்னன்’ திரைப்படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply