Maaveeran Audio Launch Date: பிரமாண்டமாக நடைபெறும் 'மாவீரன்' இசை வெளியீட்டு விழா

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ திரைப்படத்தின் இசை வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக பிரின்ஸ் படத்தில் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்த படத்தை தொடர்ந்து மாவீரன் படத்தில் நடித்துள்ளார். யோகிபாபு நடிப்பில் வெளியாகி 2 தேசிய விருதுகளை வென்ற மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் தான் மாவீரன் படத்தை இயக்கியுள்ளார்.

இயக்குனர் சங்கர் மகள் அதிதி மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா நடித்துள்ளார். மேலும் இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தின் மூலம் வில்லனாக எண்ட்ரி கொடுக்கவுள்ளார். இது தவிர புஷ்பா வில்லன் சுனில், யோகிபாபு, நடிகை சரிதா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். மாவீரன் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

மாவீரன் படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. மாவீரன் படத்தை பல மாதங்களுக்கு முன்னரே ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கிவிட்டது. ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் சென்றதால் படம் படாத பாடு படுகிறது. முதலில் படத்தை ஜூன் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் அப்போது ரெட் ஜெயண்ட் தயாரித்துள்ள மாமன்னன் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் மாவீரன் ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிப்போய் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையும் ரெட் ஜெயண்ட் வசம் இருப்பதால், மாவீரன் ரிலீஸ் தேதியை மாற்றி, அப்படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 2ஆம் தேதி சென்னை உள்ள சாய்ராம் கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் மற்றும் பிரின்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா சாய்ராம் கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இருந்த வரவேற்பை போல் இந்த திரைப்படத்திற்கும் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply