2,364 செவிலியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு |Nurse Vacancy

Nurse Vacancy – தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கான 2,364 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 50 வயதிற்கு கீழ் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ. 18000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கியமாக கொரோன காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பணியிடத்தின் விவரங்கள்:

மாவட்டம்

பணியிடங்கள்

கடைசி நாள்

தென்காசி

10

 27.01.2023

இராமநாதபுரம்

57

 28.01.2023

சிவகங்கை

41

 27.01.2023

தூதுக்குடி

42

 31.01.2023

விருதுநகர்

13

 25.01.2023

நாமக்கல்

210

 25.01.2023

மதுரை

88

 27.01.2023

கிரிஷ்ணகிரி

172

 31.01.2023

திருப்பூர்

126

 30.01.2023

கன்னியாகுமரி

40

 27.01.2023

புதுக்கோட்டை

114

 27.01.2023

தஞ்சாவூர்

140

 30.01.2023

திருச்சி

119

 31.01.2023

கோயம்புத்தூர்

119

 30.01.2023

பெரம்பலூர்

61

 27.01.2023

செங்கல்பட்டு

35

 27.01.2023

திருப்பத்தூர்

31

 25.01.2023

மயிலாடுதுறை

101

 27.01.2023

திருவள்ளூர்

78

 31.01.2023

கள்ளக்குறிச்சி

54

 25.01.2023

நாகப்பட்டினம்

69

 28.01.2023

வேலூர்

23

 28.01.2023

கடலூர்

95

 27.01.2023

ஈரோடு

150

 27.01.2023

சேலம்

218

 30.01.2023

தேனி

27

 03.02.2023

நீலகிரி

63

 27.01.2023

விழுப்புரம்

68

 31.01.2023

மொத்தம்

2,364

 

கல்வித்தகுதி:

செவிலியர் பட்டப்படிப்பு ( DGNM ) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் ( BSc. Nursing ) தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்.

விண்ணப்பிக்கும் முறை:

செவிலியர்கள் அந்தந்த மாவட்டங்களின் இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பம் செய்யலாம்.

Leave a Reply

Latest Slideshows