Oneplus Pad Go : ரூ.25,999 ஆயிரத்தில் இந்தியாவில் அறிமுகமாகிறது...

ஒன்பிளஸ் பேட் கோ (Oneplus Pad Go) புதிய 2வது வகை டேப்லெட் மாடலின் இந்திய அறிமுக தேதி அதிகாரபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாது Tablet தயாரிப்பிலும் அசுர வேகமாக வளர்ந்து வரும் Oneplus நிறுவனம், இந்திய சந்தையில் தனது இரண்டாவது டேப்லெட் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. அதாவது, ஒன்பிளஸ் நிறுவனம் முன்னதாக அறிமுகம் செய்த (Oneplus Pad) மாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது, அடுத்த படைப்பாக (Oneplus Pad Go) மாடலை வருகிற அக்டோபர் மாதம் 6ம் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த புதிய ஒன்பிளஸ் பேட் கோ மாடலானது வைஃபை-ஒன்லி (WiFi Only) வைஃபை மற்றும் செல்லுலார் கனெக்டிவிட்டி (WiFi And Cellular Connectivity) என இரண்டு வகை வேரியன்ட்களில் வரவுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த மாடல் டோன்டு டவுன் வெர்ஷனாக (Toned Down Version) ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதாவது முந்தைய பேட் மாடலைவிட குறைவான விலையிலேயே விற்பனைக்கு வரவுள்ளது. கிட்டத்தட்ட லைட் வெர்ஷன் போல வெளிவரலாம்.

Oneplus Pad Go புதிய சிறப்பம்சம்

இதில் முக்கிய சிறப்பம்சமாக கன்டென்ட் சின்க் (Content Sync Feature) அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் ஒன்பிளஸ் டிவைஸ்களிலிருந்து ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டிற்கு மீடியா மற்றும் கிளிப்போர்டு (Keyboard) கன்டென்ட்டை விரைவாக பகிர முடியும். அதுமட்டுமல்லாமல் மேலும் ஸ்க்ரீன் ஷேரிங் (Screen Sharing) எனும் புதிய அம்சம் மூலம் (Oneplus Smartphone) பயனர்கள் வைஃபை இணைப்பை பயன்படுத்தாமலேயே தங்கள் ஸ்க்ரீன்களை ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் உடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

Oneplus Pad Go Camera & Design

Design மற்றும் Camera செட்டப்பை பொறுத்தவரை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அமைப்பை கொண்டுள்ளது. அதன்படி முந்தைய பேட் மாடலில் உள்ள அதே கர்வ்டு எட்ஜ் டிசைன் (Curved Edge Design) உடனே இந்த மடலும் வருகிறது. இதுதவிர 2.4K ரெசல்யூஷனை கொண்ட டிஸ்பிளே (2/4K Resolution Display), சிங்கிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் நான்கு புதியதாக ஸ்பீக்கர் அமைப்பை கொண்டுள்ளது. அதோடு ஆக்சிஜன்ஓஎஸ் 13 (Oxygen OS 13) இயங்குதளம் மூலம் இயக்கப்படுகிறது.

Oneplus Pad Go Colors

மேட் மெட்டல் (Matte Metal) மற்றும் க்ளாஸி பினிஷ் (Glossy Finish) உடனான இரண்டு வகையான க்ரீன் கலர் டெக்ஷரில் ஒரு தனித்துவமான “ட்வின் மின்ட்” (Twin Mint) நிறத்தில் விற்பனைக்கு வருகிறது.

Oneplus Pad Go Rate

ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் ஆனது இந்தியாவில் ரூ.25,999 என்ற விற்பனை விலையில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply