Raghu Thatha Movie Shooting: ரகு தாத்தா படத்தை நிறைவு செய்த கீர்த்தி சுரேஷ்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது என்ன மாயம். விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். படம் வெற்றி பெறவில்லை என்றாலும், கீர்த்தி சுரேஷின் பக்குவமான நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இதனால் அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் குவிந்தன.

நடிப்பு என்பது சாதாரணமானது அல்ல. குறிப்பாக ஒருவரின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது பெரிய விஷயம். அதன்படி, மகாநடி படத்தில் கீர்த்தி சுரேஷ் அதை அசால்ட்டாக செய்தார். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவான படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து அனைவரும் வாயடைத்துப் போயினர். சாவித்திரியாகவே மாறிவிட்டார் என்று பாராட்டு மழை பொழியப்பட்டது. அதுமட்டுமின்றி அந்த படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

இந்தப் படம் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதைக் காப்பாற்றும் வகையில், அதன் பிறகு கதையைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் கீர்த்தி. இடையில் கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் பெங்குயின், மிஸ் இந்தியா என பெண்களை மையப்படுத்தி வந்த கதைகளிலும் நடிக்க ஆரம்பித்தார். இவர் சமீபத்தில் தசரா படத்தில் நடித்தார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது ‘பேமிலி மேன்’ படத்தின் எழுத்தாளர் சுமன்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரகு தத்தா’. இந்த படத்தை ‘கேஜிஎஃப், ‘காந்தாரா’ போன்ற சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ரவீந்திர விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசைமைக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி படத்தின் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply