Rajinikanth's Thalaivar 171 First Look Revealed : தலைவர் 171 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
ரஜினிகாந்த் தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பை போலவே லோகேஷ் கனகராஜ் இயக்கம் தலைவர் 171 படத்துக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால், கோலிவுட்டின் அதிக டிமாண்ட் இயக்குனரான லோகேஷுடன் ரஜினி முதல்முறையாக இணைகிறார். இப்படத்தின் போஸ்டர் 28.03.2024 அன்று வெளியிடப்பட்டு பெயர் ஏப்ரல் 22ம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் கடைசியாக நடித்த ஜெயிலர் படம் மெகா ஹிட்டானது. இதனால் வெற்றிக்காக காத்திருந்த ரஜினி மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறார். அந்த படத்தில் நடிக்கும்போதே த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க ரஜினி கமிட்டானார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு வேட்டையன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் ரஜினி ரசிகர்கள் உறுதியாக உள்ளனர். இந்தப் படம் போலி என்கவுன்டர் பற்றிய கதை என்று கூறப்படுகிறது. போலீஸ் அமைப்பிற்குள் இருந்து கொண்டே காவல் துறை நடத்தும் போலி என்கவுன்டர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் களமாடும்படி திரைக்கதையை ஞானவேல் அமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தின் டைட்டில் டீசர் ரஜினிக்கு தேவையான மாஸ் மற்றும் கமர்ஷியல் எலிமெண்டுகள் இதில் கண்டிப்பாக இடம்பெறும் என்பதை டீசர் உணர்த்தியுள்ளது.
தலைவர் 171 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் (Rajinikanth's Thalaivar 171 First Look Revealed )
இதற்கிடையில், கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அதற்கு தலைவர் 171 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை மெகா ஹிட் ஆக்க, லோகி தனது குழுவுடன் இணைந்து ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் இறங்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் படத்தின் மெகா ஹிட்டிற்கு பிறகு இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எவ்வளவு செலவு ஆனாலும் இந்தப் படத்தை இந்திய அளவில் பேச வைக்க வேண்டும் என்று லோகேஷுக்கு கலாநிதி மாறன் அறிவுரை கூறியதாக பேசி வருகின்றனர்.
இப்படத்தின் (Rajinikanth’s Thalaivar 171 First Look Revealed) போஸ்டர் 28.03.2024 அன்று திடீரென வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. படத்தின் போஸ்டரில் ரஜினி படு யூத்தாக இருக்கிறார். மேலும் அவரது கைகளில் தங்கக் கடிகாரங்களால் ஆன விலங்கு ஒன்றும், அவருக்குப் பின்னால் ஒரு சுவர் கடிகாரமும் உள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் படத்தின் கதை குறித்து சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்துள்ளனர்.
Latest Slideshows
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?
-
Nothing Phone 3a Lite Price : சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் Nothing Phone
-
Blind Women's T20 World Cup: உலகின் முதல் சாம்பியனாக வரலாறு படைத்தது இந்தியா!
-
IQOO 15 Price In India : iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?