Suriya Joins With Karthik Subburaj : சூர்யா 44 - கார்த்திக் சுப்புராஜுடன் இணையும் சூர்யா
சூர்யாவின் 44வது படமாக உருவாகும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவுடன் (Suriya Joins With Karthik Subburaj) கைகோர்த்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் கடைசி படமாக 2022 இல் எதற்கு துணிந்தவன் படம் வெளியானது. அதன் பிறகு விக்ரம், ராக்கெட்ரி ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த படம் வெளியாகி 2 வருடங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் சூர்யா தனது 42 வது படமாக உருவாகும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் திஷா பதானி நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும், படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். அதுமட்டுமின்றி கோவை சரளா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்ரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் என பல பிரபலங்களும் கங்குவா படத்தில் இணைந்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
கார்த்திக் சுப்புராஜுடன் இணையும் சூர்யா(Suriya Joins With Karthik Subburaj)
இப்படத்திற்கு பிறகு சூர்யா தனது 43வது படமான சுதா கொங்கரா படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பதாக கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. ஒரு டேக் லைனுடன் படம் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தை சூர்யா தன்வசத்தில் வைத்துள்ளார். சூர்யா இப்படி பிசியா இருக்கும்போதே, அவரது அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, சூர்யாவின் 44வது படமாக உருவாக இருக்கும் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் போஸ்டரை கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். Love Laughter war என்ற டேக் லைனுடன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜின் கடைசியாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் முதன்முறையாக சூர்யாவுடன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் (Suriya Joins With Karthik Subburaj) கைகோர்த்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Latest Slideshows
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Retro Release Date Announced : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
Open Secret CEO : அஹானா கௌதமின் வெற்றிப் பயணம்