Thalainagaram 2 Trailer: மிரட்டலாக வெளியான 'தலைநகரம் 2' ட்ரைலர்

Thalainagaram 2 Trailer: இயக்குனர் வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர் சி நடித்துள்ள ‘தலைநகரம் 2’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ‘தலைநகரம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சுந்தர் சி. இந்த படமானது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் சுராஜ் இயக்கத்தில், அதிரடி ஆக்‌ஷன் படமாக வெளிவந்த தலைநகரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக வைகைப்புயல் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் அனைத்தும் ‘தலைநகரம்’ படத்திற்கு கூடுதல் சிறப்பாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் வடிவேலு நடித்த நாய் சேகர் கதைக்களம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

‘தலைநகரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. ஏறக்குறைய 17 வருடங்களுக்குப் பிறகு தற்போது ‘தலைநகரம் 2’ படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் சுந்தர்ஷிக்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார்.

தம்பி ராமையா ‘பாகுபலி’ பிரபாகர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் வி.இசட்.துரை இயக்கியுள்ளார்.விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘தலைநகரம் 2’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது. மேலும் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த டிரைலர் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 2 நிமிடம் 21 வினாடியில் வெளியான இந்த ட்ரைலர் அதிரடி சண்டை காட்சிகளும், படத்தில் முழுக்க முழுக்க வன்முறையும், கவர்ச்சியும் நிறைந்து காணப்படுகிறது.

‘தலைநகரம் 2’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுந்தர்.சி.யின் படங்கள் போதிய வரவேற்பைப் பெறாததால், இந்தப் படம் சரியான கம்பேக்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக ‘காபி வித் காதல்’ 2022 ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில், அடுத்ததாக அரண்மனை 4 விரைவில் வெளியாக தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘தலைநகரம் 2’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply