Thalapathy 68 Pooja Date: தளபதி 68 பூஜைக்கு நாள் குறித்த விஜய்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார் விஜய். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தளபதி 68 படத்தின் பூஜைக்கான நாளை விஜய் குறித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

லியோ

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் ஆகிய இருவரின் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகி வரும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் அப்டேட்டும் வெளியாகியுள்ளது.

தளபதி 68 பூஜை (Thalapathy 68 Pooja Date)

அதன்படி, தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. தளபதி 68 அப்டேட் வெளியான பிறகு செய்தியாளர்களை சந்தித்த வெங்கட் பிரபு, விஜய்யுடன் இணைவது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதே சமயம், லியோ படம் வெளியான பிறகுதான் தளபதி 68 படத்தின் அடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று கூறியுள்ளார்.ஆனால் லியோ படத்தில் தனது போர்ஷன் சூட்டிங் முடிந்ததும் விஜய் தளபதி 68 படத்தில் நடிக்க ஓக்கே சொல்லிவிட்டாராம். அதேபோல் இந்த படத்தின் பூஜைக்கு விஜய் ஒரு தேதியை குறித்துவிட்டாராம். அதன்படி விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி தளபதி 68 பூஜை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், தளபதி 68 பூஜையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படாது என்று கூறப்படுகிறது.

தளபதி 68 படத்தின் பூஜையின் போது எடுக்கப்படும் விடியோவை லியோ திரைப்படம் வெளியான பின்னர் வீடியோவை வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். எனவே, தளபதி 68 பூஜை மிகவும் ரகசியமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்திற்காக விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இது உண்மைதான் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தளபதி 68 ப்ரி ரிலீஸ் பிசினஸ் 400 கொடி வரை நடைபெறும் என்பதால் விஜய்க்கு 200 கோடி கொடுக்க ஏஜிஎஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் விஜய் உறுதி செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனவும் 2024 தமிழ் புத்தாண்டு தினத்தில் தளபதி 68 வெளியாகும் என்று குறைப்படுகிறது. தளபதி 68 படத்தில் க்ருத்தி ஷெட்டி விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply