Thalapathy Vijay Provide Welfare Assistance : தென் மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஜய்

Thalapathy Vijay Provide Welfare Assistance :

நடிகர் விஜய் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை (Thalapathy Vijay Provide Welfare Assistance) வழங்கியுள்ளார். குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. 24 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி ஓடியது. முன்னெச்சரிக்கையாக 5 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வரலாறு காணாத கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆங்காங்கே தண்ணீரால் சூழப்பட்டதால் மீட்புப் பணிகளும் பெரும் சிக்கலாக மாறியது. பல பகுதிகளில் 5 முதல் 6 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பலர் தங்கள் வீடுகளை இழந்து, உணவு, தங்குமிடம் மற்றும் அடிப்படை வாழ்வாதாரங்களை கூட இழந்து தவித்தனர்.

மீட்பு பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தது. பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறை, இந்திய ராணுவம், காவல் துறை எனப் பலர் இணைந்து பணியாற்றினர். தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதுமட்டுமின்றி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு நிவாரணப் பொருட்களையும் வழங்கியது. இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் நலத்திட்ட (Thalapathy Vijay Provide Welfare Assistance) உதவிகளை வழங்கினார். இதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து காரில் நெல்லை-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள கேடிசி நகர் பகுதியில் உள்ள மாதா மாளிகை என்ற திருமண மண்டபத்திற்கு வருகை புரிந்தார்.

விஜய் கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வெள்ள நிவாரணப் பொருட்களை விஜய்யிடம் இருந்து பெற்றுக் கொண்டு முதியவர்கள், இளைஞர்கள் என வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். விஜய்யிடம் நிவாரணப் பொருட்களை வாங்க வந்த பெண் ஒருவர், விஜயிடம் சென்று விஜய் எங்கே என்று கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேடைக்கு வந்த பெண்மணி பரபரப்பாக விஜய்யை தேடியபடியே இருக்க, அங்கு நிவாரணப் பொருட்களுடன் விஜய் நிற்பதை அவள் கவனிக்கவில்லை. அதன் பிறகு விஜய்யிடம் சென்று பொருட்களை வாங்கி விஜய் எங்கே என்று கேட்டுள்ளார். நான் தான் விஜய் என்று விஜய் கூறியது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply