Top 9 Health Benefits Of Lemon: சாதாரண எலுமிச்சையில் இவ்வளவு சத்துக்களா?

எலுமிச்சையின் அபார நன்மைகளைப் பற்றி இப்பகுதியில் பார்க்க இருக்கிறோம். இராஜகனி, பித்த முறிமாதர், தெய்வீகக்கனி பல சிறப்பு பெயர்கள் இந்த எலுமிச்சைக்கு உண்டு. இதன் கணக்கில் அடங்காத நன்மைகள் தான் இதன் சிறப்பிற்கு காரணம். சிட்ரஸ் பழமான இந்த எலுமிச்சையில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி மட்டுமில்லாமல், நார்ச்சத்து, கால்சியம், ஃபோலெட், பேண்டோதெக் அமிலம், மெக்னிஷியம், பொட்டாஷியம், தாமிரம் இது போன்று ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் இதில் கலோரிகள் குறைவாக உள்ளதால் இதை யார் வேண்டுமானாலும் பயமில்லாமல் சாப்பிடலாம்.

முக்கியமாக இந்த எலுமிச்சை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். எனவே இதன் நன்மைகள் ஒவ்வொன்றும் வியப்பை தருவதாக உள்ளது. அந்த வகையில் தினமும் ஒரு 200 ml வெது வெதுப்பான தண்ணீரில் அரை மூடி எலுமிச்சை சாறை கலந்து குடித்தால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கிறது அப்படி என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

எலுமிச்சையின் நன்மைகள் (Benefits Of Lemon):

  1. எலுமிச்சையில் அதிகமுள்ள வைட்டமின் சி நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியது. ஒருவருக்கு ஒருநாளைக்கு தேவையான வைட்டமின் சி அளவில் பாதியை ஒரு எலுமிச்சை கொடுத்துவிடும். எனவே அடிக்கடி எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்று நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும். இதனால், சளி சுவாச கோளாறுகள் மற்றும் நுரையீரல் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
  2. அதேபோன்று இந்த எலுமிச்சை செரிமானத்திற்கு உதவும் பித்த நீரை சுரக்க உதவுகிறது. இதிலுள்ள கனிம சத்துக்கள், வைட்டமின்கள் செரிமான பாதையில் உள்ள டாக்சின்களை எளிதில் வெளியேற்றும். எனவே தினமும் காலையில் வெது வெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் குடல் இயக்கம் சீராக இருக்கும்.
  3. எலும்புகள் வலிமையாக இருக்க நமது உணவில் கால்ஷியம், பாஸ்பரஸ், மெக்னிஷியம், பொட்டாஷியம் போன்ற சத்துக்கள் அதிகம் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்த எலுமிச்சையில் அத்தனை சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளன. எனவே அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறு அருந்தி வந்தால் எலும்புகள் வலிமை பெற்று எலும்பு தேய்மானம், (Osteoporosis) எலும்புப்புரை போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும். இது டையூடிக் விளைவை கொண்டுள்ளதால் வாத நோய் மற்றும் கீழ் வாதம் காரணமாக ஏற்படும் வலியை ஆற்ற இந்த எலுமிச்சை உதவுகிறது.
  4. இதிலுள்ள வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாஷியம், போலெட் போன்றவை சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல, சர்க்கரை நோயை தடுக்க நினைப்போருக்கும் சிறந்தது என்கிறது அமெரிக்க டயாபெட்டீஸ் அசோசியேஷன். எனவே சர்க்கரை நோயாளிகள் காலை 11 மணியளவில் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை குடித்து வந்தால் ரத்த சர்க்கரையும் சீராகும். உடனடி ஆற்றல் கிடைத்து உடலுக்கு புத்துணர்வும் கிடைக்கும்.
  5. இதிலுள்ள உள்ள (Pectin) பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்தானது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. எனவே இதை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய தொடங்கும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெது வெதுப்பான நீரில் அரை மூடி எலும்பிச்சை சாறு கலந்து தினமும் காலை எழுந்தவுடன் சாப்பிட்டுவந்தால் உடல் எடை படிப்படியாக குறைய தொடங்கும். மேலும் இதிலுள்ள ஆன்டிஆக்சிடண்ட் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். அதே போன்று உடற்பயிற்சிக்கு முன் எலுமிச்சை சாறு அருந்தினால் உடல் பயிற்சி செய்வதால் ஏற்படும் உடல் சோர்வு மற்றும் கலைப்பு நீங்கும்.
  6. அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடும்போது கல்லீரலில் தேவை இல்லாத நச்சுக்கள் சேர்ந்து பிற்காலத்தில் நோய்களை ஏற்படுத்தும். இந்த பிரட்சனைகள் வராமல் தடுக்க அடிக்கடி எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் அருந்த வேண்டும். இதனால் கல்லீரலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் தூய்மையடைந்து, கல்லீரல் ஆரோக்கியமாக இயங்கும். குறிப்பாக மது, புகை பழக்கம் உள்ளவர்கள் அவசியம் இதை பின்பற்ற வேண்டும்.
  7. எலுமிச்சை சாறு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதையும் தடுக்கக்கூடியது. காரணம் எலுமிச்சையில் உள்ள சிட்ரேட் பெரிய கற்களை கூட உடைத்து சிறுநீர் வழியாக எளிதாக வெளியேற்ற உதவுகிறது. மேலும் சிறுநீரின் அளவை அதிகரித்து உடலில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றி சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது. 
  8. பழங்கால முதல் புற்றுநோய்களுக்கு எதிரான மருத்துவ சிகிச்சைகளில் சிட்ரஸ் பழமான இந்த எலுமிச்சை பழங்களையே அதிகம் பயன்படுத்தி வந்துள்ளனர். இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடண்ட் அதிகம் உள்ளதால் இந்த சத்துக்கள் நம் ரத்தத்தில் உருவாகும் ப்ரிராடிகள்களை உருவாகாமல் தடுத்து புற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
  9. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எலுமிச்சை சாறை அருந்தி வந்தால் உயர் இரத்த அழுத்தம் சீராகும். மேலும் இது பித்தம், தொண்டை வலி நீக்கும், வாந்தியை நிறுத்தும், காலரா கிருமிகளை ஒழிக்கும், பல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும். மஞ்சள் காமாலைகளையும் குணப்படுத்த உதவுகிறது. முக்கியமாக யானை கால் வியாதிகளையும் குணப்படுத்துகிறது. இவ்வளவு நன்மைகளை கொண்ட எங்கும் எளிதாக கிடைக்க கூடிய இந்த எலுமிச்சை சாப்பிட நமக்கு நன்மை உண்டாகும்.  

Latest Slideshows

Leave a Reply