VOC Port Trust Recruitment 2023: தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பனரனார் துறைமுக ஆணையத்தின் அலுவகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிதித்துறை, சட்டம், ஐ.டி., மனித வளம், சுற்றுச்சூழல், தொடர்பியல் உள்ளிட்ட பல துறைகளில் உள்ள காலியிடங்களுக்கான ஒப்பந்தம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வேலைகளுக்கு தேவையான தகுதிகள் என என்பதை குறித்து தற்போது காணலாம்.

VOC Port Trust Recruitment 2023 பணி விவரங்கள்

* சீனியர் கன்சல்டண்ட்

* கன்சல்டண்ட்

* அசோசியேட் கன்சல்டண்ட்

VOC Port Trust Recruitment 2023 வயது வரம்பு:

  • சீனியர் கன்சல்டண்ட் பணிக்கு 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • கன்சல்டண்ட் பணிக்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • அசோசியேட் கன்சல்டண்ட் பணிக்கு 40 வயது இருக்க வேண்டும்.

VOC Port Trust Recruitment 2023 பணிக்கான தகுதிகள்:

இந்த பணியில் விண்ணப்பிக்க சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

VOC Port Trust Recruitment 2023 பணியின் காலம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் இரண்டு ஆண்டு கால ஒப்பந்தம் அடிப்படையில் பணிக்கு அமர்த்தபடுவர்.

ஊதியம்:

அரசு அறிவித்த விதிகளின் படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தேர்வு முறை:

இந்த பணிக்கு கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.vocport.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த துறையில் பயிற்சிகளும் வழங்கப்படும்.

Latest Slideshows

Leave a Reply