இந்தியாவின் BrahMos Missile ஏவுகணையை முதல் முறையாக பிலிப்பைன்ஸ் வாங்குகிறது

BrahMos Missile :

இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கிய (BrahMos Missile) ஏவுகணையை பிலிப்பைன்ஸ் நாடு முதல் முறையாக கொள்முதல் செய்துள்ளது. இது இந்தியா (India) மற்றும் ரஷ்யா (Russia) ஆகிய இரு நாடுகளின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த ஏவுகணையாகும். மேலும் இது பிரம்மோஸ் மிஸைல் (BrahMos Missile) அல்லது பிஜே-10 (PJ-10) என்று அழைக்கப்படும் ஒரு நடுத்தர தூர ராம்ஜெட் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையாகும். இந்த பிரமோஸ் ஏவுகணை விமானம் தாங்கி போர் கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் TEL ஆகியவற்றிலிருந்து ஏவக்கூடிய ஒரு நடுத்தர தூர ‘ராம்ஜெட் சூப்பர்சோனிக் க்ரூஸ்’ ஏவுகணையாகும்.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (DRDO) மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் NPO ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும். மேலும் இந்த ஏவுகணையானது அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட குறிவைத்து தாக்கும் சக்தி திறன்கொண்ட ஏவுகணை என்பது கவனிக்கத்தக்கது. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகள் இணைந்து இந்த பிரம்மோஸ் ஏரோஸ்பேஸை உருவாக்கியுள்ளது. இந்த BrahMos Missile ஏவுகணைக்கு DRDO பிரம்மோஸ் என்ற பெயரை சூட்டியுள்ளது. பிரமோஸ் என்ற பெயர் இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி (Brahmaputra) மற்றும் ரஷ்யாவின் மாஸ்க்வா (Moskva) என்ற இருநாட்டின் நதிகளின் பெயரை குறிக்கிறது.

இந்த இரண்டு நாடுகளின் முக்கிய நதிகளின் பெயரின் அடிப்படையில் இந்த ஏவுகணைக்கு DRDO ஆராய்ச்சி குழு பிரமோஸ் என்ற பெயரை சூட்டியுள்ளது. நிலம், நீர் மற்றும் ஆகாயம் என்று பல இலக்குகளை குறிவைத்து துல்லியமாக தாக்கும் இந்த BrahMos ஏவுகணையை  இந்தியா மிக சிறந்த ஆயுதமாக உருவாக்கியுள்ளது. இப்படிப்பட்ட தலைசிறந்த இந்த BrahMos ஏவுகணையை இந்தியாவிடம் இருந்து வாங்க பல நாடுகள் வாங்குவதற்கு முன் வருகிறது. இந்த முயற்சியில் பிலிப்பைன்ஸ் நாடு BrahMos ஏவுகணையை வெற்றிகரமாக இந்தியாவிடம் இருந்து வாங்கிய முதல் நாடாகும்.

இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே போடப்பட்ட 2022 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி பிரமோஸ் ஏவுகணையை பிலிப்பைன்ஸ் நாடு சுமார் 375 மில்லியன் அமெரிக்கா டாலர் செலவு செய்து இந்தியாவிடம் இருந்து வாங்கியுள்ளது. பிரமோஸ் ஏவுகணையின் உதிரி பாகங்களை இந்தியாவின் விமானப்படையின் C-17 விமானம் மூலம் இந்தியா பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அனுப்பியுள்ளது. இதில் பிரமோஸ் ஏவுகணைக்கு சொந்தமான பேட்டரிகள் மற்றும் பல முக்கியமான ஏவுகணை உபகரணங்களை இந்தியா பிரமோஸ் ஏவுகணைகளுடன் வழங்கியுள்ளது. மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட பிரமோஸ் ஏவுகணை (BrahMos Missile) அந்நாட்டு அரசிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply