Snake Form Larger Than Anaconda Discovered : அனகோண்டாவை விட பெரிய பாம்பின் படிவம் கண்டறியபட்டுள்ளது

Snake Form Larger Than Anaconda Discovered :

ஆய்வாளர்கள் 47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 15 மீ உலகிலேயே அனகோண்டாவை விட பெரிய நீளமான பாம்பின் படிவத்தை (Snake Form Larger Than Anaconda Discovered) தற்போது கண்டறிந்துள்ளனர். சமீபத்தில், IIT ரூர்க்கியில் உள்ள புவி அறிவியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். டைட்டனோபோவா என்பது நமக்குத் தெரிந்த அனகோண்டா பாம்புகளை விடப் பல மடங்கு பெரியவை மற்றும் ராட்சத வகையைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆராய்ச்சியாளார்கள் டைட்டனோபோவா முன் அனகோண்டாவே ஒரு பூச்சிதான் என்கிறார்கள். இப்படிவத்திலிருந்து 27 முதுகெலும்புகளை கண்டெடுத்த ஆராய்ச்சியாளர்கள், இந்த பாம்பிற்கு வாசுகி என்று பெயரிட்டுள்ளனர்

தங்களின் X தளப்பதிவில் IIT ரூர்க்கியைச் சேர்ந்த பேராசிரியர் சுனில் பாஜ்பாய் மற்றும் தேபாஜித் தத்தா ஆகியோர், வாசுகி பாம்பினைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் இந்த வாசுகி பாம்பானது 47 மில்லியனுக்கு முன் வாழ்ந்ததாகவும், இதன் நீளம் சுமார் 15 மீட்டர் இருக்கும் எனவும், இதன் எடை குறைந்தது ஒரு டன் (1000 கிலோ) இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். பெரிய நிலப்பரப்பில் இவ்வகைப் பாம்பு வாழக்கூடியது என்றும் இந்தவகை பாம்புகள் 100 மில்லியன் ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இந்த பாம்பு வகை விஷமற்றதாக இருந்திருக்கக்கூடும் என்றும், மலைப்பாம்பினைப்போல் இறையை தனது உடலால் இறுக்கி முழுங்கக்கூடியது என்றும், சதுப்புநிலப்பகுதியில் வாழக்கூடிய வகை என்றும் கூறுகின்றனர். இதன்  தாடைப்பகுதிகள் உணவை மென்று விழுங்கும் திறன் ஒரு வளர்ந்த நீர்யானையை முழுவதுமாக விழுங்கும் அளவிற்கு விரியக்கூடியது.

இதோடு ஒப்பிடுகையில் மனிதனை உண்பது என்பது சிற்றுண்டி போலவே இருந்திருக்கும் ஆனால் அக்காலத்தில் நீர்யானையோ மனித இனமோ பரிணமித்து இருக்கவில்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும். இது நன்னீரை அண்டிய சதுப்பு நிலப்பரப்பிலேயே உயிர் வாழ்ந்துள்ளது. எனவே இதன் பிரதான உணவாக நன்னீர் மீன்கள் முதலைகள் மற்றும் ஆமைகள் போன்றனவே இருந்துள்ளன. இது இரையை நசுக்கி கொன்றுண்ணும் பண்பையே கொண்டிருந்தது. இந்த வாசுகி பாம்பானது குஜராத் மாநிலத்தில் 47 மில்லியனுக்கு முன் வாழ்ந்ததாகவும், இதன் நீளம் சுமார் 15 மீட்டர் இருக்கும் எனவும், இதன் எடை குறைந்தது ஒரு டன் (1000 கிலோ) இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வகைப் பாம்பு பெரிய நிலப்பரப்பில் வாழக்கூடியது (Snake Form Larger Than Anaconda Discovered) எனவும் இவ்வகை பாம்புகள் 100 மில்லியன் ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .

Latest Slideshows

Leave a Reply