OnePlus Smartphone Ban By Offline Retailers : ஆப்லைன் கடைகளை OnePlus நிறுவனம் மூட உள்ளதாக தகவல்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக மொபைல் சாதனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஒன்பிளஸ் (OnePlus) பார்க்கப்படுகிறது. தற்போது திடீரென இந்த முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டின் ஆப்லைன் கடைகள் மூடப்படும் (OnePlus Smartphone Ban By Offline Retailers) என்று தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட் செக்மென்ட் மற்றும் பிளாக்க்ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் என்று எல்லா வகையிலும் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இந்தியாவில் உள்ள 4500-க்கும் மேற்பட்ட ஒன்பிளஸ் ரீடெய்ல் ஸ்டோர் கடைகளை (OnePlus Smartphone Ban By Offline Retailers) நிறுவனம் மூடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

OnePlus Smartphone Ban By Offline Retailers :

  • இந்த அறிவிப்பானது ஒன்பிளஸ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தற்போது வெளியான தகவலின்படி வரும் மே 1,2024 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 4500-க்கும் மேற்பட்ட OnePlus ஆப்லைன் ரீடைலர் கடைகளை நிறுவனம் (OnePlus Smartphone Ban By Offline Retailers) மூட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஓன்பிளஸ் நிறுவனம் மேற்கொண்ட ஒரு தவறு தான் என்று கூறப்பட்டுள்ளது.

  • ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை பெரும்பாலும் மக்கள் ஆன்லைன் மூலமே வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஒன்பிளஸ் பிராண்ட் ஆன்லைன் சேனல்களில் மிகப்பெரிய விற்பனையாளராக இன்று வரை திகழ்ந்து வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் ஆப்லைன் மார்க்கெட்டில் அதிக கவனம் செலுத்த தவறி விட்டதால் இந்தியாவிலுள்ள ரீடெய்லர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

  • ஆப்லைன் கடைகளில் OnePlus சாதனங்களை விற்பனை செய்ய அதன் ரீடெய்லர்களுக்கு போதுமான அளவுக்கு ‘மார்ஜினை’ இந்நிறுவனம் வழங்க தவறியதால்தான் ஆப்லைன் கடைகள் மூடப்படுவதாக (OnePlus Smartphone Ban By Offline Retailers) கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இந்தியாவில் உள்ள தென் மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள அதிகாரப்பூர்வமான ஒன்பிளஸ் ஸ்டோர்களை ரீடெய்லர்கள் லாபமின்மை காரணத்தினால் இழுத்து மூட முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  • மே மாதத்தை தொடர்ந்து வரும் மாதங்களில் தமிழ்நாடு, குஜராத், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஆப்லைன் மார்க்கெட்டில் வாங்க கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆனால் ஆன்லைன் விற்பனையில் எந்தவித தடையும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

  • இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 4500-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்படும் நிலையில் இருப்பதாக ரீடைலர் சங்க மக்கள் தெரிவித்துள்ளனர். உறுதியாக வரும் மே 1,2024 ஆம் தேதிக்கு பிறகு ஒன்பிளஸ் ஆப்லைன் கடைகளை மக்கள் காண்பது அரிதாகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கு ஆதரவாக மல்டி ரீடைலர் ஆப்லைன் கடைகளில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்குமென்றும் கூறப்பட்டுள்ளது.

  • மல்டி ரீடைலர் ஆப்லைன் கடைகள் என்றால் பல முன்னணி பிராண்டு ஸ்மார்ட்போன்கள் ஒரே இடத்தில் விற்பனை செய்யும் கடைகளாக செயல்படும் ஆப்லைன் கடைகளில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் கவனம் செலுத்திய அளவிற்கு ஆப்லைன் விற்பனையில் கவனம் செலுத்த தவறிய காரணத்தால் தமிழகத்திலும் ஒன்பிளஸ் கடைகள் மூடப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply