Luxury Cruise Tourism Craze : அதிகரித்து வரும் சொகுசு கப்பல் சுற்றுலா மோகம்

Luxury Cruise Tourism Craze :

சொகுசு கப்பல் உள்நாட்டு சுற்றுலாவில் 2023-24 ஆம் நிதியாண்டில் மட்டும் 4.7 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். க்ரூஸ் கப்பல் சுற்றுலா மீதான மோகம் 85% (Luxury Cruise Tourism Craze) அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் மக்கள் சொகுசு கப்பல் சுற்றுலா என்றால் பெரிதும் ஆர்வம் காட்டியதில்லை. தற்போது சொகுசு கப்பல் சுற்றுலா செல்லும் மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகின்றது.

கொரோனா நெருக்கடி தந்த மனமாற்றம் :

குறிப்பாக கொரோனா நெருக்கடி காலகட்டத்திற்கு பின்னர் சொகுசு கப்பல் சுற்றுலா மோகம் அதிகரித்து (Luxury Cruise Tourism Craze) இருக்கிறது. கட்டணம் அதிகமாக இருக்கும், பாதுகாப்பு விஷயத்தில் சிக்கல் இருக்கும் மற்றும் எதுக்கு வம்பு என ஒதுங்கியே இருந்த மக்கள் கொரோனா நெருக்கடியில் வீட்டிற்குள்ளேயே முடங்கியதால், வெளியில் வந்ததும் க்ரூஸ் கப்பல் சுற்றுலாவும் சென்று வரலாம் மற்றும் அதையும் தான் பார்த்து விடலாம் என்று  மக்கள் கப்பல் பயணம் செய்யத் தொடங்கிவிட்டனர்.

பெரிய லெவலுக்கு ட்ரெண்டான சொகுசு கப்பல் சுற்றுலா மோகம் :

உள்நாட்டு சுற்றுலா மற்றும் வெளிநாட்டு சுற்றுலா என இரண்டு விதமான பயண சேவைகளை சொகுசு கப்பல் வழங்குகிறது. உள்நாட்டு சொகுசு கப்பல் சுற்றுலா ஆனது மும்பை – கோவா, மும்பை – டையூ, மும்பை – கொச்சி, மும்பை – லட்சத்தீவுகள், மும்பை – ஹை சீஸ் மற்றும் சென்னை – விசாகப்பட்டினம் ஆகிய வழித்தடங்களில் பயண சேவைகளை வழங்குகிறது. மும்பை, கோவா, மங்களூரு மற்றும் கொச்சி ஆகிய துறைமுகங்களில் இருந்து வெளிநாட்டு சொகுசு கப்பல் சுற்றுலா பயண சேவைகளை வழங்குகிறது. இந்த சொகுசு கப்பல் சுற்றுலா ஆனது மக்களிடையே பெரிய அளவில் பிடித்து போக, சமூக வலைதளங்களில் வேற லெவலுக்கு ட்ரெண்டானது. 2021ல் இருந்து தொடங்கிய ஆர்வம் அதிகரித்து தற்போதைய சூழலில் வரலாறு காணாத அளவிற்கு க்ரூஸ் கப்பல் சுற்றுலாவில் மக்கள் பயணம் செய்ய தொடங்கிவிட்டனர்.

இந்தியாவில் புதிய சுற்றுலா தலமாக சொகுசு கப்பல் பயணம் மாறியிருக்கிறது :

இந்திய மக்கள் மத்தியில் கடல்வழி சொகுசு கப்பல் சுற்றுலா பயணம் பெரிதும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது ஆற்று வழி கப்பல் சுற்றுலாவிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. ஆற்று வழி கப்பல் சுற்றுலாவில்,

  • கங்கை நதியின் வாரணாசி – ஹால்தியா
  • பிரம்மபுத்திரா நதியின் தூப்ரி – சதியா வழித்தடங்கள் இடம்பெற்றுள்ளன

அடுத்தகட்டமாக மத்திய அரசு  தீம் அடிப்படையில் கப்பல் சுற்றுலாவை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. தீம் அடிப்படையில் குஜராத் ஆன்மீக சுற்றுலா, மேற்கு கடலோர கலாச்சார சுற்றுலா, தெற்கு கடலோர ஆயுர்வேத சுற்றுலா மற்றும் கிழக்கு கடலோர பாரம்பரிய சுற்றுலா ஆகியவை ஆகும். சுற்றுலா பயணிகள் இந்த அறிவிப்பிற்காக ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

பெரிதும் வரவேற்பு பெற்ற நிலையில் சொகுசு கப்பல் சுற்றுலா பயணம் :

2023-24 ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் இருந்து அளிக்கப்படும் சொகுசு கப்பல் சுற்றுலாவில் 4.7 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் சொகுசு கப்பல் சுற்றுலாவில் பங்கேற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 29,026 ஆகும். அதுவே 2023-24 ஆம் நிதியாண்டில் 98,344 ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டு சுற்றுலாவில் இந்தியர்கள் ஆர்வம் மற்றும் மோகம் 85% (Luxury Cruise Tourism Craze) அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில் கட்டுப்படியாகக் கூடிய கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது மற்றும் இ-விசா சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply