Interesting Facts About Peacocks : மயில்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்

பார்த்தாலும் சலிக்காத அதிசயங்களில் ஒன்று மயில். மயிலின் அழகில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. இந்தியாவின் தேசிய பறவை மயில் பற்றிய (Interesting Facts About Peacocks) சில குறிப்புகள். ஆங்கிலத்தில் மயிலின் பொதுவான பெயர் Peafowl. ஆண் மயிலின் பெயர் Peacock. Peahen என்பது பெண் மயிலின் பெயர்.

  • இந்திய மயிலின் அறிவியல் பெயர் பாவோ கிரிஸ்டேடஸ்.
  • ஆண் மயிலுக்கு சேவல் என்னும் தமிழ் பெயரும் உண்டு.
  • மயில் வேட்டையாடுதல் இந்தியச் சட்டத்தின் 1972ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • மயில் மிகவும் குரல் கொடுக்கும் பறவைகளில் ஒன்று. சாதாரண நாட்களை விட மழைக்காலத்தில் இரைச்சல் அதிகமாக இருக்கும். காட்டில் மயிலின் குரலைக் கேட்டாலே புலி போன்ற ஆபத்தான விலங்குகள் இருப்பதை அறியலாம்.
  • ஒரு நாள் வயதுடைய மயில் குஞ்சுகள் தாயின் உதவியின்றி தானாக நடக்க முடியும்.
  • ஆண் மயில் பெண் மயில்களைக் கவரவும், மற்ற விலங்குகளை அதன் இறகுகளை விரித்து பயமுறுத்தவும் அதன் வண்ணமயமான இறகுகளைப் பயன்படுத்துகிறது.
  • மயிலின் தோகை நாம் பார்க்கும் கோணத்தைப் பொறுத்து வெவ்வேறு வண்ணங்களைப் பிரதிபலிக்கிறது.
  • மயிலின் ஒலியை அகவல், அலல், ஏங்கல் போன்ற பல சொற்களால் குறிப்பிடப்படுகிறது.
  • மயில் தோகையின் மற்ற பெயர்கள் : கூந்தல், சந்திரகம், கலபம், கூழை, பீலி, தொங்கல் மற்றும் தூவி.
  • 1963 இல் இந்தியாவின் தேசிய பறவையாக மயில் அறிவிக்கப்பட்டது.
  • மயில்களை தேசியப் பறவையாகக் கொண்ட பிற நாடுகள் : மியான்மர் மற்றும் காங்கோ.
  • வெள்ளை மற்றும் சாம்பல் நிற மயில்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.

Interesting Facts About Peacocks :

  • மயில்களின் ஆயுட்காலம் :

     

  • மயில்கள் சராசரியாக 20 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
  • பூங்காக்கள் மற்றும் மனித பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதிகளில் 40 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
  • இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மயில்கள் மனிதர்கள் வேட்டையாடுவதனால் இறக்கின்றன.

  • மயில்களுக்கு நீச்சல் அடிக்க தெரியுமா ?

     

  • கால் விரல்களுக்கு இடையில் சவ்வுகள் இருந்தாலும் மயில்கள் நீச்சல் அடிப்பதில்லை.
  • அந்த சவ்வுகள் மரக்கிளைகளில் ஏற உதவுகின்றன.
  • ஆண் மயில்கள் அழகான தோகையை வைத்துக் கொண்டிருந்தாலும் அது நீச்சல் அடிக்க உதவுவதில்லை.

  • கலாச்சாரத்தில் இடம் பிடித்த மயில்கள் :

     

  • மயில்களுக்கு புராணங்களிலும் கலாச்சாரத்திலும் இடம் உண்டு.
  • கிரேக்கர்கள் வழிபாட்டிலும் மயில் இடம் பிடித்துள்ளது.

  • மயில்களின் குணம் :

     

  • மயில்கள் சாந்தமான பறவையாக இருக்கின்றது. எளிதில் மனிதர்களுடன் நெருங்கி பழகும் தன்மை உடையது. மயில்கள் தான் பழகும் மனிதர்களிடம் மற்றவர்கள் நெருங்கி பழகுவதை விரும்பாது.

  • பாம்பு vs மயில் :

     

  • காடுகளிலும் கழனிகளிலும் மயில்கள் சில நேரத்தில் பாம்புகளை காண முடிகின்றது. விஷ பாம்புகளுடன் மோதும் போதும் மயில்கள் கண்டிப்பாக வெல்லும். மயில்கள் பாம்புகளை பிடித்து உணவாக உண்ணும். கோவில்களில் வளர்க்கப்படும் மயில்கள் அதன் அருகில் உள்ள பகுதிகளில் பாம்புகள் இருந்தால் அதனை துரத்தி செல்லும். இதனால் கோவிலை சுற்றி அரணாக பாதுகாக்கின்றது.

  • மயில்களின் பறக்கும் தன்மை :

     

  • மயில்களுக்கு அழகான நீண்ட தோகைகள் இருந்தாலும் அதனால் நீண்ட தூரம் பறக்க முடியாது. குறிப்பிட்ட தூரம் மட்டுமே பறக்கும். அதுவும் ஆபத்து காலத்தில் தன்னை பாதுகாக்க பறக்கின்றன.

Latest Slideshows

Leave a Reply