Foxes Were Kept As Pets : மனிதர்கள் முதன்முதலில் நரியை செல்லப்பிராணியாக வளர்த்துள்ளனர்

Foxes Were Kept As Pets :

  • பழங்காலத்தில் மக்களால் வளர்க்கப்பட்ட நரிகளின் (Foxes Were Kept As Pets) எச்சங்கள் அர்ஜென்டினாவில் உள்ள தொல்பொருள் தளத்தில் அவற்றின் உரிமையாளர்களுடன் புதைக்கப்பட்டிருந்தன. ‘டியூசியோன் அவுஸ்’ என அழைக்கப்படும் இந்த நரிகள் அர்ஜென்டினாவின் படகோனியாவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டைக்காரர்களால் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டுள்ளன.
  • சில ஆய்வுகளின்படி ஐரோப்பிய நாய்களின் வருகைக்குப் பிறகு மக்கள் நரிகளை செல்லப்பிராணிகளாகப் (Foxes Were Kept As Pets) புறக்கணிக்கத் தொடங்கினர் என தெரிவிக்கிறது. ஒரு சமீபத்திய ஆய்வில் காலநிலை மாற்றம் பல்வேறு சூழ்நிலை காரணிகளே அவற்றின் அழிவுக்கு உண்மையான காரணம் என்று காட்டுகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இருக்கும் ஓபிலி லெப்ராஸ்ஸர் என்பவர் தென் அமெரிக்காவில் சில பகுதிகளில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது கல்லறையில் ஒரு நபருடன் புதைக்கப்பட்ட ஒரு நரியின் எச்சங்களையும் குழு கண்டறிந்துள்ளது.
  • மேலும் ஒரு மனிதனுடன் புதைக்கப்பட்ட நரியின் எச்சங்கள் கனடா நாட்டில்  கண்டுபிடிக்கப்பட்டன. நரி எலும்பு மாதிரிகள் தென் அமெரிக்க நரிகளின் ‘லைகலோபெக்ஸ்’ இனத்தைச் சேர்ந்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால் துல்லியமான அளவீடுகள் மற்றும் டிஎன்ஏ பகுப்பாய்வை மேற்கொண்டபோது அது டியூசியோன் அவுஸின் இனத்தைச் சேர்ந்தவை என பிறகு  கண்டறியப்பட்டது.
  • நரியின் எலும்புகளில் உள்ள நைட்ரஜன் மற்றும் கார்பன் ஐசோடோப்புகளின் பகுப்பாய்வானது கல்லறையில் புதைக்கப்பட்ட நபரைப் போன்றே  தாவரங்கள் நிறைந்த உணவை விலங்கு சாப்பிட்டது என்பதைக் தெளிவாக காட்டுகிறது என்று லெப்ராசர் கூறினார். காட்டு நரிகள் பொதுவாக அதிக இறைச்சியை உண்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும். ஆனால் இந்த கல்லறைக்குள் காணப்படும் நரி மனிதன் சாப்பிட்ட அனைத்தையும்  தின்று வளர்ந்ததை அதன் எச்சங்கள் நிரூபித்துள்ளது.
  • நரி வேட்டையாடும் குழுக்களுக்கு மதிப்புமிக்க துணையாக இருந்தது என்பது மிகவும் நம்பத்தகுந்த விளக்கம் என்று ஆசிரியர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். நாய்கள் (கேனிஸ் ஃபேமிலியாரிஸ்) முதன்முதலாக தென் அமெரிக்க கண்டத்திற்கு சுமார் 4000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளன.  ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்பே நரியை மனிதர்கள் வளர்க்க (Foxes Were Kept As Pets) தொடங்கியுள்ளனர் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஓபிலி லெப்ராஸ்ஸர் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply