மத்திய அரசு New EV Policy அறிவித்துள்ளது

New EV Policy - அதிரடி வரிகுறைப்பு :

இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களுக்கான தேவை ஆனது அதிகரித்து வருவதால் மின்சார வாகன உற்பத்தியை ஊக்கப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. மத்திய அரசு இந்தியாவை உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன உற்பத்தி Hub ஆக மாற்றுவதற்கான இலக்குடன் மற்றும் டெஸ்லா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்யவும் மற்றும் முதலீடு செய்யவும், வெளிநாட்டு நிறுவனங்களின் அதிநவீன உற்பத்தி தொழில்நுட்பத்தையும் இந்தியாவுக்குக் கொண்டு வரவும் கவர்ந்திழுக்கும் நோக்கத்தில் புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கையை (New EV Policy) கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசு ஆனது டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் கேட்ட வரி சலுகையை விட அதிகமாக கொடுத்துள்ளது. இந்தியாவில் மின்சார கார்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை அமைக்க முன்மொழிந்துள்ள டெஸ்லா இந்தப் புதிய அதிரடி வரிகுறைப்பு கொள்கையினால் அதிக பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கை (New EV Policy) ஆனது இந்திய மக்கள் வெளிநாட்டு மின்சார வாகனங்களை வாங்க ஊக்குவிக்கும். இதன் மூலம், இந்தியாவின் “ஆத்மநிர்பார் பாரத்” திட்டம்  ஆனது கூடுதல் வலிமை பெறும்.

எலக்ட்ரிக் வாகன வரிச் சலுகையைப் பெற மத்திய அரசு வைத்துள்ள சில பல முக்கிய கண்டிஷன்கள் :

மத்திய அரசின் புதிய எலக்ட்ரிக் வாகன வரிச் சலுகையைப் பெற வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் குறைந்தது,

  • 500 மில்லியன் டாலர் அதாவது 4,150 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய வேண்டும்.
  • அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்புகள் எதுவும் இல்லை.
  • முதலீடு செய்யும் நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்குள் உற்பத்தி தொழிற்சாலையை இந்தியாவில் கட்டி அமைத்து உற்பத்தியை துவங்கி இருக்க வேண்டும்.

இவற்றை பின்பற்றும் பட்சத்தில் தான் கார்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை ஆனது வழங்கப்படும். இந்த மத்திய அரசின் முதலீட்டு உறுதி மற்றும் குறைந்தபட்ச முதலீடு நிபந்தனைகளைப் பின்பற்றாத சூழ்நிலையில், நிறுவனங்கள் மீது வங்கி கேரண்ட்டி மூலம் (New EV Policy) தகுந்த நடவடிக்கைகள் ஆனது எடுக்கப்படும்.

Latest Slideshows

Leave a Reply