Chennai Ford Factory Reopening : Ford நிறுவனம் அதன் சென்னை தொழிற்சாலையை மீண்டும் திறக்க பரிசீலித்து வருகிறது

இந்திய அரசின்  புதிய மின்சார வாகனக் கொள்கை (EV Policy) அறிவிப்பானது  தொடர்ந்து உலகளாவிய வாகன உற்பத்தியாளர்களின் நுழைவுக்கு வழி வகுக்கிறது. அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான Ford மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச சந்தை குழுமத்தின் தலைவர் கே.ஹார்ட் தமிழக அரசுடன் தனது Ford மோட்டார் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விவாதிக்க சமீபத்தில் இந்தியா வந்திருந்தார்.

மேலும் இந்தியாவில் Ford மோட்டார் நிறுவனத்தின் மறு நுழைவுத் திட்டங்களை மதிப்பீடு செய்துள்ளார். தற்போது Ford மோட்டார் நிறுவனம் ஆனது இந்திய சந்தையில் மீண்டும் நுழைவதற்கான பல திட்டங்களை மதிப்பீடு செய்து சென்னை தொழிற்சாலையை (Chennai Ford Factory Reopening) மீண்டும் திறக்க மற்றும்  உற்பத்தியை மீண்டும் தொடங்க பரிசீலித்து வருகின்றது.

Ford நிறுவனத்தின் மறைமலைநகர் தொழிற்சாலை (Chennai Ford Factory Reopening )

Ford மோட்டார் நிறுவனத்தின்  இன்டர்நேஷனல் மார்க்கெட்ஸ் குழுமத்தின் தலைவர் கே ஹார்ட் சென்னையை அடுத்துள்ள ஃபோர்டு-ன் மறைமலைநகர் தொழிற்சாலை தொடர்பான நிறுவனத்தின் திட்டங்களை மதிப்பிடுவதற்காக தமிழக அரசு அதிகாரிகளை சந்தித்தார். Ford மோட்டார் நிறுவனத்தின் எதிர்கால இந்தியா திட்டங்களை தமிழக அரசுடன் விவாதித்து கலந்துரையாடினார். மேலும் Ford நிறுவனம் ஆனது இந்தியாவில் மின்சார வாகனத் தளங்களை உள்ளூர்மயமாக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக  கூறினார்.

2021 ஆம் ஆண்டில் Ford இன் சென்னை ஆலையில் வாகன உற்பத்திகள் ஆனது  முடிவடைந்தது. இந்த 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், Ford மோட்டார் நிறுவனம் ஆனது தொழிற்சாலையை விற்பனை செய்யும் திட்டங்களை நிறுத்திவிட்டு இந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுதொடக்கம் செய்ய எதிர்பார்க்கின்றது. சமீபத்திய Ford இன் முன்னேற்றங்கள், உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யக்கூடிய Endeavour-ரின் மறுவெளியீட்டில் தொடங்கி, இந்தியாவில்  Ford இன் செயல்பாடுகளை மறுதொடக்கம் செய்ய  Ford  மோட்டார் நிறுவனம் ஆனது எதிர்பார்க்கிறது என்று தெரிவித்துள்ளது. இது CBU பாதை வழியாக Mustang Mach-E ஐ இந்தியாவிற்கு கொண்டு வரக்கூடும்.

Ford இன் மூத்த தலைவர்கள் தமிழக அரசின் விலைமதிப்பற்ற ஆதரவிற்கு தங்களது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர். தங்களது  தலைமையகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 2,500-3,000 கூடுதல் வேலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். Ford நிறுவனம்  அதன்  தொழிற்சாலையை விற்பனை செய்யும் திட்டங்களை நிறுத்திவிட்டு, மீண்டும் வருவதற்கான வசதியை தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. சென்னை தொழிற்சாலையை மீண்டும் திறக்க Ford மோட்டார் நிறுவனம் (Chennai Ford Factory Reopening) ஆனது பரிசீலித்து வருகிறது.  

Latest Slideshows

Leave a Reply