Federal Bank Opened 26 New Branches : Federal Bank ஆனது 26 புதிய கிளைகளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கியது
Federal Bank ஆனது 26 புதிய கிளைகளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் (Federal Bank Opened 26 New Branches) 27/03/2024 அன்று தொடங்கியது. இன்றைய 27/03/2024-ந்தேதி அறிமுகம் உட்பட இந்த 2024-ஆம் நிதியாண்டில் Federal Bank 50 கிளைகளைச் சேர்த்துள்ளது. Federal Bank-ன் CEO, ஷியாம் சீனிவாசன் 26 புதிய கிளைகளை Federal Bank-ன் மண்டலத் தலைவர் எக்பால் மனோஜ் மற்றும் பிற பணியாளர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
இதனால் சென்னை மண்டலத்தில் தற்போது பெடரல் வங்கியின் கிளைகளின் எண்ணிக்கை 250ஐ தாண்டியுள்ளது. இதன் மூலம், தனியார் துறை வங்கி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 250 கிளைகளைக் கடந்து, இன்றைய அறிமுகம் உட்பட இந்த நிதியாண்டில் 50 கிளைகளைச் சேர்த்துள்ளது.
புதன்கிழமை தமிழகம் முழுவதும் திறக்கப்பட்ட 26 கிளைகள்
Ponneri, Vadalur, Koviloor, Villianur, Aranthangi, Nallur (Kurumbur), Arurpatti, Manapparai, Bommahalli (Karimangalam), Masinaickenpatti (Ayothiapattinam), Chinnanerkunam, Peruveli (Saravambakkam), Erranahalli (Palacode), Karukkanahalli (Rayakottai), Siruvadi, Kuruppanaickenpalayam, Mammudi (Thalaivasal), Manakudi, Manakkal, Mathimangalam, Mittahalli, Naduvakurichi, Pudurnadu, Sammattividuthy, Thirupalaivanam And Krishnapuram.
27/03/2024 அன்று 26 கிளைகள் (Federal Bank Opened 26 New Branches) தொடங்கப்பட்டதன் மூலம் தமிழகத்தில் Federal Bank-ன் 250வது கிளை தொடங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் Federal Bank 1,500 கிளைகளை எட்டும்.
Federal Bank பற்றி ஓர் குறிப்பு :
பெடரல் வங்கி ஒரு முன்னணி இந்திய தனியார் துறை வங்கியாகும். பெடரல் வங்கி 1270+ கிளைகள் மற்றும் 1950+ ஏடிஎம்கள் பெற்றுள்ளது. இது பல்வேறு விநியோக வழிகள் மூலம் சில்லறை, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEகள்), விவசாய மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்காத இந்திய வாடிக்கையாளர்களுக்கு துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள Federal Bank-ன் பிரதிநிதி அலுவலகங்கள் ஆனது வசதியான டச் பாயிண்ட்களாக செயல்படுகின்றன.
Federal Bank ஆனது மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங், பரிவர்த்தனை வங்கிச் சேவைகள், வணிகர் வங்கிச் சேவைகள், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், ப்ரீபெய்ட் கார்டுகள், கட்டண வசூல், டெபாசிட்டரி சேவைகள், காப்பீடு, ஆன்லைன் பில் செலுத்துதல், மியூச்சுவல் ஃபண்ட் தயாரிப்புகள் போன்ற பல தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.
Federal Bank ஆனது அதன் கொள்கைகளை அப்படியே வைத்துக்கொண்டு, உயர்ந்த தரத்தில் சேவைகளை வழங்கும் நிறுவனமாக தன்னை மாற்றிக் கொண்டு எதிர்காலத்திற்கான நன்கு வரையறுக்கப்பட்ட முன்னேற்றத்திற்கான பார்வையைக் கொண்டுள்ளது.
Federal Bank-ன் CEO ஷியாம் சீனிவாசன், “நாங்கள் கடந்த 2023-ஆம் ஆண்டு 75 கிளைகளைத் திறந்தோம். நாங்கள் 2023 நிதியாண்டு முடிவடைந்தவுடன் 140 கிளைகளைத் திறந்துள்ளோம். இது 10% கூடுதலாகும். Federal Bank ஆனது சில்லறை டெபாசிட் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. Federal Bank ஆனது 19% அதிகரிப்பை எட்டுகிறது” என்று கூறினார்.
Latest Slideshows
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
TN Leads In Higher Education : தமிழ்நாடு உயர்கல்வி சேர்க்கையில் 47% பெற்று முன்னிலை வகிக்கிறது
-
Thuthikkeerai Benefits In Tamil : துத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Jadeja Is Ranked 1152 In The ICC Rankings : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஜடேஜா 458 புள்ளிகளுடன் 1152-வது நாளாக முதலிடம் நீடிப்பு
-
TNGECL Introduced 3 New Internet Services : TNGECL ஒரே நேரத்தில் 3 வகையான இணையதள சேவையை துவக்கி உள்ளது
-
Vasanth & Co Retail Success Story : நடுத்தர வர்க்க கனவுகளை தவணைகளில் நிறைவேற்றிய வசந்த் & கோ-வின் வெற்றி பயணம்
-
Tribute To Soldiers Of India : இளையராஜா X தளத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு
-
SBI Circle Based Officer Recruitment : எஸ்பிஐ வங்கியில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
NFBD Champ Awards 4.0 : நம்ம பேமிலி குரூப் நடத்தும் பிரமாண்ட விருது வழங்கும் விழா