Tnpsc Group 1 Exam: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் Group 1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது...!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் Tamil Nadu Public Service Commission (TNPSC) மாவட்ட துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உதவி ஆணையர் மற்றும் துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய Group 1 (Tnpsc Group 1 Exam) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 90 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
- துணை ஆட்சியர் (Deputy Collector) பணியிடங்களுக்கு மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- காவல் துறை துணை கண்காணிப்பாளர் (Deputy Superintendent of Police) பணியிடங்களுக்கு மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- உதவி ஆணையர் மற்றும் வணிக வரித்துறை (Assistant Commissioner (Commercial Taxes) பணியிடங்களுக்கு மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- துணைப் பதிவாளர் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் (Deputy Registrar of Cooperative Societies) பணியிடங்களுக்கு மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஊரக வளர்ச்சி துறை மற்றும் உதவி இயக்குனர் (Assistant Director of Rural Development) பணியிடங்களுக்கு மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
- மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer) பணியிடங்களுக்கு மொத்தம் 01 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
- மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் (District Officer (Fire and Rescue Services) பணியிடங்களுக்கு மொத்தம் 01 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
2. கல்வித் தகுதி (Educational Qualification)
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு (UG) முடித்திருக்க வேண்டும். மேலும் வணிகவியல், பொருளாதாரம், சமூகவியல் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு சில பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. வயதுத் தகுதி (Age)
இந்த பணியிடங்களுக்கு 01.07.2024 அன்று வரை 21 வயது முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவினர் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4. சம்பளம் (Salary)
இந்த குரூப்1 பணியிடங்களுக்குதேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.56,100 – 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த Group 1 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வானது 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மொத்தம் 200 வினாக்கள் இடம்பெறும். இதில் பொது அறிவு பகுதிகளில் இருந்து 175 வினாக்கள் மற்றும் கணிதப் பகுதியிலிருந்து 25 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான கால அளவானது 3 மணி நேரம் ஆகும்.
6. முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்:
இந்த Group 1 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு 13.07.2024 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வானது மொத்தம் நான்கு தாள்களாக நடைபெறும். முதல் தாளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்த தேர்வில் குறைந்தது 40 மதிப்பெண்கள் கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. மேலும் இது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.
அடுத்த மூன்று தாள்களும் பொது அறிவு பகுதியை சார்ந்தவை. ஓவ்வொரு தாளில் இருந்தும் தலா 250 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவானது 3 மணி நேரம் ஆகும். முதன்மைத் தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கபடுவர். நேர்முகத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
7. விண்ணப்பக் கட்டணம் (Application Fees)
இந்த Group 1 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.150 இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணம் :
பொது பிரிவினருக்கு முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரூ.100 முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.200 மேலும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. விண்ணப்பிக்கும் முறை (Application Process)
இந்த Group 1 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
9. விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
இந்த Group 1 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.04.2024 ஆகும்.
10. மேலும் விவரங்களுக்கு
https://www.tnpsc.gov.in/Document/tamil/04_2024_GRP1_TAM_.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
Kerala Matta Rice Benefits In Tamil : கேரள மட்டை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Yezhu Kadal Yezhu Malai Trailer Released : ஏழு கடல் ஏழு மலை திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்