Most Wickets In IPL : ஐபிஎல் தொடரில் புதிய சாதனை | அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாஹல்

ஜெய்ப்பூர் :

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சாஹல் அபார சாதனை (Most Wickets In IPL) படைத்துள்ளார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறியது. கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்களிலும், இஷான் கிஷன் அவுட்டாக, சூர்யகுமார் யாதவ் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திலக் வர்மாவும், ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபியும் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். அனுபவ வீரர் முகமது நபி மெதுவாக ரன்களைச் சேர்த்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 135 ஆக இருந்தது. ரன்-ரேட்டை அதிகரிக்க முயன்ற சாஹல் நபியின் விக்கெட்டை வீழ்த்தினார்.

Most Wickets In IPL - சாஹல் :

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை (Most Wickets In IPL) சாஹல் படைத்துள்ளார். 153 போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல், இதுவரை 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிஎஸ்கே அணியின் பிராவோ 183 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். சாவ்லா 181 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும், சன்ரைசர்ஸ் அணியின் புவனேஷ்வர் குமார் 174 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். அமித் மிஸ்ரா 173 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் மற்றும் அஷ்வின் தலா 172 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.

33 வயதான சாஹல் இன்னும் வலுவாக இருக்கிறார். ஆனால் சில காரணங்களால் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. தற்போது டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், அதில் சாஹலின் பெயர் இடம்பெறாது என தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை (Most Wickets In IPL) பெற்ற சாஹலுக்கு ஏன் இந்த நிலை என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர். 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையில் சாஹல் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply