Thalaivar 171 Title Update : இன்று வெளியாகிறது தலைவர் 171 டைட்டில்

Thalaivar 171 Title Update :

ரஜினியின் 171வது படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் (Thalaivar 171 Title Update) ரசிகர்கள் பெரிய ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைய உள்ளார். எந்திரன், பேட்ட, தர்பார், அண்ணாத்த, ஜெயிலர் ஆகிய படங்களை தொடர்ந்து ரஜினி 6வது முறையாக இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. லியோ படத்திற்கு பிறகு லோகேஷின் அடுத்த படம் ரஜினியுடன் என்றதுமே கோலிவுட்டில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது லோகேஷ் சினிமா பிரபஞ்சத்தில் இந்தப் படம் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அனிருத் இசைமைக்கும் ரஜினியின் 171வது படத்தின் தலைப்பு (Thalaivar 171 Title Update) இன்று மாலை வெளியிடப்படுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஒரே திருவிழாதான். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரஜினியின் மணிக்கட்டில் விதவிதமான கைக்கடிகாரங்கள் அணிந்திருக்கும் போஸ்டர்களும் வெளியாகி, டைட்டில் என்னவாக இருக்கும் என்று நம்மை யோசிக்க வைக்கிறது. இதற்கிடையில், சினிமா வட்டாரத்தில் கிடைத்த தகவலின்படி, டைட்டில் ப்ரோமோ 45 வினாடிகள் நீளமாக இருக்கும் எனவும், மேலும் அனிருத் அமைத்த பிஜிஎம் தாறுமாறாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் நேற்று D.I.S.C.O என்ற வார்த்தையை எக்ஸ் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். எனவே விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் தலைப்பு GOAT என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. அப்படியொரு வார்த்தை தான் தலைப்பாக இருக்குமா எனவும் குழப்பம் எழுந்துள்ளது. எது எப்படியோ ரஜினி ரசிகர்களுக்கு இன்று ஒரு விருந்து தான். #Thalaivar171TitleReveal, #LokeshKanagaraj என்ற ஹேஸ்டேக்குகளும் ட்ரெண்டிங்கில் உள்ளன.

Latest Slideshows

Leave a Reply