ஏப்ரல் 1, 2024 முதல் US Visa And H-1B தொடர்பான புதிய விதிகள்

US Visa And H-1B தொடர்பான பல புதிய முக்கிய விதிகள் ஏப்ரல் 1, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது :

அமெரிக்க அரசாங்கத்தின் நோக்கம் : 

அமெரிக்க அரசாங்கத்தின் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் ஆனது (USCIS – U.S. Citizenship And Immigration Services) H-1B பதிவு செயல்முறையை (US Visa And H-1B) மேம்படுத்தவும் மற்றும் மோசடிக்கான வாய்ப்பைக் குறைக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த USCIS ஆனது குடியேற்ற அமைப்பை நிர்வகிக்கிறது. மேலும் இந்த USCIS ஆனது முதலாளிக்கும் பணியாளருக்கும் இடையே நெகிழ்வுத்தன்மையைக் கொண்டு வருகிறது.

H-1B பதிவு மற்றும் தாக்கல் செயல்முறைக்கான 2024-ன் புதிய விதிகள் :

புதிய விசாக் கட்டண அட்டவணை ஆனது H-1B, L-1 மற்றும் EB-5 விசா வகைகளின் விலையை பாதிக்கும். இவை புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா வகைகள் ஆகும்.

  • ஏப்ரல் மாதத்தில் இருந்து H-1B பதிவுக்கான செலவு மற்றும் படிவம் I-129க்கான மனு தாக்கல் கட்டணம் கணிசமாக உயரும்.
  • H-1B பதிவு செயல்முறை கட்டணம் ஆனது $10 -லிருந்து $215-ஆக உயர்த்தப்படும். இது 2,050% அதிகரிப்பு ஆகும்.
  • படிவம் I-129 க்கான மனு தாக்கல் கட்டணம் $780 ஆகும். படிவம் I-129 H-1B மனு தாக்கல் கட்டணம் ஆனது H-1B பதிவுக்கட்டணத்தை காட்டிலும் கூடுதல் ஆகும்.
  • H-1B விசா வழங்கப்பட்டால், அந்த பயனாளி அமெரிக்காவிற்குள் நுழைய மற்றும் பயன்படுத்த திட்டமிட்டுள்ள பாஸ்போர்ட் அல்லது பயண ஆவணம் பயனாளியிடம் இருக்க வேண்டும்.
  • ஒரு பாஸ்போர்ட் அல்லது பயண ஆவணத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளியும் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • USCIS சேவை மையங்கள் ஏப்ரல் 1, 2024 முதல் H-1B1 (HSC) வகைப்பாட்டைக் கோரும் படிவம் I-129 மனுக்களை ஏற்காது.
  • USCIS சேவை மையத்தில் ஏப்ரல் 1, 2024 அன்று அல்லது அதற்குப் பிறகு பெறப்பட்ட H-1B1 (HSC) மனுக்களை USCIS நிராகரிக்கும்.
  • ஏப்ரல் 1, 2024 முதல், H-1B1 (HSC) அல்லது H-1B வகைப்பாட்டைக் கோரும் அனைத்து காகிதப் படிவம் I-129 மனுக்களும்,
  1. படிவம் I-907
  2. படிவம் I-539
  3. 3.படிவம் I-765 என USCIS லாக்பாக்ஸ் வசதியில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  • ஏப்ரல் 1, 2024 முதல் ஜூன் 3, 2024 வரையிலான சலுகைக் காலத்தில் USCIS ஆனது சரியான கட்டணத்துடன் தாக்கல் செய்யப்பட்ட சில படிவங்களின் முந்தைய பதிப்புகளை ஏற்கும்.
  • உயர்த்தப்பட்ட கட்டணங்கள் மற்றும் புதிய விதிகள் ( US Visa And H-1B) ஆனது ஏப்ரல் 1, 2024 முதல் அமுலில் உள்ளது. இதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் சாத்தியமான துஷ்பிரயோகம் மற்றும் மோசடியைத் தடுக்க உள்ளது.

Latest Slideshows

Leave a Reply