Virat Created History : சர்வதேச மற்றும் உள்நாட்டு T20 போட்டிகளில் 12 ஆயிரம் ரன்கள் குவிப்பு

Virat Created History :

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான 2024 ஐபிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் விராட் கோலி அபார சாதனை (Virat Created History) படைத்தார். விராட் கோலி சர்வதேச மற்றும் உள்நாட்டு டி20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 12000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 6 ரன்களைக் கடந்த போது விராட் கோலி இந்த மிகப்பெரிய சாதனையைப் படைத்தார். மேலும், இந்தப் போட்டியில் 21 ரன்கள் எடுத்த கோலி, சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 12000 டி20 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் இந்த மைல்கல்லை எட்டிய உலகின் ஆறாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். முன்னதாக கிறிஸ் கெய்ல், ஷோயப் மாலிக், பொல்லார்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். அதே சமயம் குறைந்த இன்னிங்சில் 12000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தில் (Virat Created History) உள்ளார்.

டி20களில் குறைந்த இன்னிங்ஸ்களில் 12000 ரன்கள் எடுத்த வீரர்கள் :

  • 345 இன்னிங்ஸ் – கிறிஸ் கெய்ல்
  • 360 இன்னிங்ஸ் – விராட் கோலி
  • 368 இன்னிங்ஸ் – டேவிட் வார்னர்
  • 432 இன்னிங்ஸ் – அலெக்ஸ் ஹேல்ஸ்
  • 451 இன்னிங்ஸ் – சோயப் மாலிக்
  • 550 இன்னிங்ஸ் – பொல்லார்ட்

ஐபிஎல் சிஎஸ்கே அணிக்கு எதிராக 1,000-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரர்கள் :

  • 1057 – ஷிகர் தவான் vs சி.எஸ்.கே
  • 1030 – விராட் கோலி vs  சி.எஸ்.கே

2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் டு பிளேஸ் 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ரஜத் படிதார், மேக்ஸ்வெல் ஆகியோர் டக் அவுட்டாகினர். விக்கெட் சரிவுகளுக்கு இடையே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 6 ரன்களை கடந்தபோது இந்த மைல்கல்லை (Virat Created History) எட்டினார்.

Latest Slideshows

Leave a Reply