WhatsApp Will Introduce a New Feature : வாட்ஸ்அப் நிறுவனம் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் (UPI) வசதியைக் அறிமுகப்படுத்தவுள்ளது...!

இந்தியாவை தவிர்த்து வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் (UPI) சேவையை  கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (Phone Pay) நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த நிலையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனமும் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் (UPI) வசதியைக் (WhatsApp Will Introduce a New Feature) கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் தற்போது சர்வதேச (UPI) பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியை இந்தியப் பயனர்களுக்கு வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஸ்கிரீன்ஷாட்கள் சமீபத்தில் ஆன்லைனில் வெளியானது.

இந்த ஸ்கிரீன்ஷாட் மூலமாக புதிய வசதியானது யுபிஐ செட்டிங்ஸ் (UPI Settings) என்ற பக்கத்தில் இன்டர்நேஷனல் பேமண்ட்ஸ் (International Payments) எனும் ஆப்ஷனில் வழங்கப்பட உள்ளது என்பது தெரியவந்துள்ளது.  நீங்கள் இந்த விருப்பத்தை தேர்வு செய்வதற்கு முன் சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் ஆப்ஷன் என்பதை முதலில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதன்பின் எவ்வளவு காலம் இது செயல்படுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

கடந்த 2020-ஆம்  ஆண்டு தான் முதலில்  வாட்ஸ்அப் செயலியில் யுபிஐ பேமண்ட் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு  இதில் 140-க்கும் மேற்பட்ட வங்கிகளைப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது  வாட்ஸ்அப்பில் சர்வதேச யுபிஐ பேமண்ட் மேற்கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. 

மேலும் இந்த சர்வதேச யுபிஐ பேமண்ட் (International Payments) வசதி தற்போது தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மிக  கூடிய விரைவில் இந்த புதிய வசதி அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது (WhatsApp Will Introduce a New Feature)

தற்போது வாட்ஸ்அப் செயலியில்  ஸ்டேட்டஸ் வைப்பதற்கு  வெறும் 30 வினாடி வீடியோவை மட்டுமே  வைக்க வாட்ஸ்அப் நிறுவனம் அனுமதிக்கிறது.  இந்த 30 வினாடி ஸ்டேட்டஸ் நேரம் போதாது என பல பயனர்கள் வாட்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வாட்ஸ்அப் நிறுவனம் இந்த 30 வினாடி கால அவகாசத்தை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது.

இனிமேல் வாட்ஸ் ஸ்டேட்டஸ் கால அளவு 60 வினாடிகளாக மாற்றப்பட உள்ளது.  இந்த புதிய அப்டேட் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது. தற்போது இதற்கான அனைத்து வேலைகளையும் வாட்ஸ்அப் நிறுவனம் செய்து வருவதாக இன்ஃபோ (WABetaInfo) வலைதலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

வாட்ஸ்அப் பீட்டா பக்கத்தில் வெளியான தகவலின்படி தற்போது 60 வினாடி வீடியோக்களை அனுமதிக்கும் புதிய அப்டேட்டை சோதனை செய்யப்பட்டுவருகிறது. இந்த சோதனை  முயற்சியானது வாட்ஸ்அப் பீட்ட வெர்ஷன் ஆண்ட்ராய்டு 2.24.7.6 இல் செய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த புதிய அம்சம் சில பீட்டா வெர்ஷன் பயனர்களுக்கு மட்டுமே பயன்படுத்தக் கிடைக்கிறது எனவும்  கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த புதிய அம்சம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply