AAI Jobs Alert 2024 : 422 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய விமானச் சேவைத் துறையின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ராம்ப் இயக்குனர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை (AAI Jobs Alert 2024) நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AAI Jobs Alert 2024 - Utility Agent Cum Ramp Driver :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : சென்னை சர்வதேச விமான நிலையத்தில் Utility Agent Cum Ramp Driver பணியிடங்களுக்கு மொத்தம் 130 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- கல்வித் தகுதி (Educational Qualification) : சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இந்த Utility Agent Cum Ramp Driver பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வயதுத் தகுதி (Age Qualification) : இந்த Utility Agent Cum Ramp Driver பணியிடங்களுக்கு (AAI Jobs Alert 2024) 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் OBC பிரிவினர் 31 வயது வரையிலும் SC/ST பிரிவினர் 33 வயது வரையிலும் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : இந்த Utility Agent Cum Ramp Driver பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.24,960 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AAI Jobs Alert 2024 - Handyman/ Handywoman :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : சென்னை சர்வதேச விமான நிலையத்தில் Handymen/Handywomen பணியிடங்களுக்கு மொத்தம் 292 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த Handyman/Handywoman பணியிடங்களுக்கு (AAI Jobs Alert 2024) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age Qualification) : இந்த Handyman/Handywoman பணியிடங்களுக்கு 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் OBC பிரிவினர் 30 வயது வரையிலும் SC/ST பிரிவினர் 33 வயது வரையிலும் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : இந்த Handyman/Handywoman பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.22,530 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த இரண்டு பணியிடங்களுக்கும் (AAI Jobs Alert 2024) நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.aiasl.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிறகு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் தேவையான ஆவணங்களுடன் கீழ்காணும் முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள வேண்டும்.
- நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Contact : HRD Department, AI Unity Complex, Pallavaram Cantonment, Chennai -600043
- நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : Utility Agent Cum Ramp Driver பணியிடங்களுக்கு வரும் 02.05.2024 அன்று நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. Handyman பணியிடங்களுக்கு (AAI Jobs Alert 2024) வரும் 04.05.2024 அன்று நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த இரண்டு பணியிடங்களுக்கும் (AAI Jobs Alert 2024) நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் 500 ரூபாய்க்கு AI AIRPORT SERVICES LIMITED என்ற பெயரில் டி.டி எடுத்து கொள்ள வேண்டும். மேலும் SC/ST மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
- மேலும் விவரங்களுக்கு : https://www.aiasl.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
Yoga Benefits : யோகா செய்வதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!
-
International Film Festival 2025 : 23-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச 11-ல் தொடக்கம்..!
-
Madras High Court Recruitment : சென்னை உயர் நீதிமன்றத்தில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?