How To Check EC In Online : ஆன்லைனில் ஒரே நிமிடத்தில் வில்லங்கம் பார்ப்பது எப்படி?

வீடு அல்லது நிலம் வாங்க போறீங்களா? சம்பந்தப்பட்ட இடத்தில் வில்லங்கம் உள்ளதா என்று ஆன்லைனிலேயே பார்ப்பது (How To Check EC In Online) எப்படி என்று தெரியுமா? பொதுவாக வீடு, நிலம், வீட்டு மனை போன்ற சொத்துகளை வாங்க விரும்புவர்கள் அந்த சொத்தின் முந்தைய உரிமையாளர் (Owner) யார் என்பது குறித்தும் அந்த சொத்தில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்கு வில்லங்க சான்றினை பெறுவார்கள்.

வில்லங்கம் :

வீடு கட்டுவதற்கோ அல்லது தொழில் தொடங்கவோ பிடித்த இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தை வாங்குவதற்கு தேவையான பணத்தை கடன்  வாங்கி வைத்து கடனுக்கு வட்டியும் கட்டி ஒரு இடத்தை வாங்கும் போது அதில் உள்ள நிறை குறைகளை தெரிந்து வாங்க வேண்டும். நாம் வாங்கும் சொத்தின்  உண்மையான உரிமையாளர் (Owner)  யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழே வில்லங்க சான்றிதழாகும். அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணமாகும். இதற்கு முன் அந்த சொத்து யார் யார்? வசம் இருந்து கைமாறி வந்துள்ளது என்ற  எல்லா விவரங்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.

மேலும் அந்த சொத்து பத்திர பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு) சர்வே எண் விவரம் உட்பட பல்வேறு விவரங்களும் இந்த வில்லங்கத்தில் உள்ளடங்கி இருக்கும். தற்போது அசையா சொத்தின் மீது வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களில் கடன் பெறவும் வில்லங்க சான்று முக்கியமான தேவையாக இருக்கிறது. இதற்கு முன்  இந்த வில்லங்க சான்றினை பெறுவதற்காக பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியதாக  இருந்தது. ஆனால் தற்போது ஆன்லைன் மூலமாகவே (How To Check EC In Online) இந்த வில்லங்க சான்றினை பொதுமக்கள் பெற முடியும்.

How To Check EC In Online - வில்லங்க சான்றிதழ் :

தமிழ்நாடு பதிவுத்துறை சார்பில் வழங்கப்படும் இந்த வில்லங்க சான்றினை இணைய வழியில் எளிய முறையில் ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இதற்காக எந்தவித லஞ்சமும் யாருக்கும் தர வேண்டிய அவசியமில்லை. மேலும் ஆன்லைனிலேயே வில்லங்கத்தை பார்க்கலாம். அதுவும் ஒரு நிமிடத்தில்  பார்க்கலாம். இதற்கு கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

www.ecview.tnreginet.net என்ற அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு (How To Check EC In Online) செல்ல வேண்டும். மாவட்டம், மண்டலம், எந்த தேதியிலிருந்து, எந்த தேதி வரை வேண்டும் என்பன போன்ற ஆப்ஷன்களை எல்லாம் தேர்வு செய்ய வேண்டும். பிறகு சப் ரிஜிஸ்டர் அலுவலகம் மற்றும் உங்கள் ஏரியா அலுவலகம், கிராமம், பத்திரத்தில் உள்ள சர்வே நம்பர் போன்றவற்றை பிழை இல்லாமல் பதிவிட்டு சர்ச் ஆப்ஷனை கிளிக்செய்தால் போதும். நாம் தேர்வு செய்த இடத்திற்கான வில்லங்கம் PDF வடிவில் கிடைக்கும்.

Latest Slideshows

Leave a Reply