Patta Name Correction Online: பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு நில அளவை பணிக்கான உரிமம் தமிழக அரசு வழங்கியுள்ளது...!

தமிழகத்தில் வீடு மற்றும் மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வருவாய்துறைக்கு விண்ணப்பம் செய்வது நாளுக்குநாள் அதிகரித்துகொண்டு வருகிறது. இதன்  தேவையை சமாளிக்கும் விதமாக புதிதாக தற்போது 1,231 பொறியாளர்களுக்கு நில அளவை பணிக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் முக்கியமானது ரியல் எஸ்டேட் துறையாகும்.  அதிலும் பத்திரப்பதிவில் தான் அதிக வருவாய் கிடைக்கிறது. சென்னை மற்றும் கோவை,மதுரை உள்ளிட்ட  பெரிய நகரங்களில் வீடு மற்றும் மனை விற்பனை அதிகரித்துள்ளது. வீடு மற்றும் மனைக்கான பத்திரம் மாற்றுவோர் உடனே  பட்டாவில் பெயர் மாற்றம் செய்து கொள்கிறார்கள். இதற்கு அவர்கள் அரசிடம்  பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிப்பார்கள் அதற்கான விண்ணப்பங்கங்கள் வழக்கத்தைவிட கடந்த சில வருடங்களாக அதிகரித்து கொண்டே வருகிறது.

Tamil Nadu Patta Name Correction

ஒரு நிலத்திற்கு  பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் முதலில் அந்த நிலத்தை அளக்க வேண்டும்.  அது சர்வேயர் எனப்படும் நிலஅளவையரின் பணியாகும். ஒரு விவசாய நிலத்தை  வீட்டு மனைகளாக மாற்றப்படும் போது அந்த நிலத்தை பல்வேறு பாகங்களாக பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. அப்படி பல்வேறு பாகங்களாக மாற்றப்படும் நிலங்களின் உட்பிரிவு பட்டாவாக கணக்கிடப்படும். அந்த உட்பிரிவிற்கு   பட்டா கோரி மக்கள் விண்ணப்பிக்கிறார்கள். இதனை சம்பந்தப்பபட்ட  அந்த ஊராட்சி  அல்லது நகராட்சியின் நில அளவையாளர் நேரில் சென்று நிலத்தை அளந்து எல்லைகளை வரையறுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு பகுதிகளில் குறுவட்ட நிலையில் நில அளவையாளர்கள்  இருக்கிறார்கள். ஒரு கிராமத்துக்கு ஒருவர் வீதம் நில அளவர் இருந்தால் மட்டுமே இப்பணிகளை விரைந்து முடிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. நிலத்தை அளக்கும் நில அளவையர்கள் போதிய அளவில் இல்லாததால் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.

நில அளவையர் பணியாளர் பற்றாக்குறை காரணமாக நில அளவை பணியில் உரிமம் அடிப்படையில் வெளியாட்களை ஈடுபடுத்த தற்போது முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கட்டுமான பொறியியல் பட்டதாரிகளுக்கு  நில அளவை பணி குறித்த பயிற்சியுடன்  உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. புதிதாக  1,231 பேருக்கு நில அளவை பணிக்கான உரிமம் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள்  தாலுகா அளவில் பணி புரிய அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். பட்டா  உட்பிரிவு கோரி வரும் கோப்புகளில் சம்பந்தப்பட்ட நிலத்தை அளக்க இவர்கள் பயன்படுத்தப்படுவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  மேலும் முடிக்கப்படும் கோப்புகள் எண்ணிக்கை அடிப்படையில்  இவர்களுக்கான சம்பளம்  வழங்கப்படுவதாகவும்  அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

நில அளவை பணிக்கு கட்டுமான பொறியாளர்களை உரிமம் அடிப்படையில் செயல்பட அரசு அனுமதி அளித்திருப்பதை பலரும் வரவேற்றுள்ளனர். இந்த நில அளவை பணிக்கு தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மூன்று வருடம் டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நில அளவை செய்வதற்கான உரிமம் பெறுவதற்கான 3 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் இந்த நிலஅளவைப் பயிற்சி நிலையம் இருக்கிறது.

நில அளவையர்கள் குறைவாக இருந்த காரணத்தில் தான் பட்டா பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் எற்பட்டது. இப்போது நில அளவையர்களுக்கு புதிதாக உரிமம் வழங்கப்பட்டுள்ளதால்  இனி பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிப்போர் குறிப்பாக உட்பிரிவு பட்டாவிற்கு விண்ணப்பிப்பது அல்லது உட்பிரிவு பட்டா பெயர் மாற்றம் செய்வது ஆகியவை எளிதாகும்.

Latest Slideshows

Leave a Reply