Mankatha Re-release : மே 1 ஆம் தேதி ரீ-ரிலீஸாகிறது அஜித்குமாரின் மங்காத்தா

சென்னை :

தற்போது அதிகமாக பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து வருகிறர்கள். அந்த படங்களை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

ஆஹா, அப்போதெல்லாம் எவ்வளவு நன்றாக படமாக்கியிருக்கிறார்கள். தற்போது ஏன் அப்படி இல்லை என்று ரீ-ரிலீஸ் படங்களைப் பார்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒரு படம் ரீ-ரிலீஸாக உள்ளது. அதாவது அஜித் குமார் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற மங்காத்தா படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி ரீ-ரிலீஸாவது (Mankatha Re-release) உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிலீஸைப் போலவே ரீ-ரிலீஸிலும் மங்காத்தா வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், விநாயக் மகாதேவ் எனும் போலீஸ் அதிகாரியாக அஜித்குமார் நடித்த மங்காத்தா திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக அஜீத் குமாருக்காக யுவன் ஷங்கர் ராஜா போட்ட மாஸ் பிஜிஎம் இன்றும் பிரபலமாக உள்ளது. சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்து ஹீரோனா தலை முடிக்கு டை அடித்து தான் நடிக்கணும் என்று இல்லை என ஒரு புது டிரெண்டை உருவாக்கினார் அஜித்குமார். அவரது சால்ட் அன்ட் பெப்பர் லுக் வைரலானது. அதைப் பார்த்து பலர் முடியை மாற்றிக்கொண்ட கதைகள் உண்டு.

Mankatha Re-release :

இப்படி அனைவரையும் கவர்ந்த மங்காத்தா, அஜித் குமாரின் பிறந்தநாளான மே 1ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் (Mankatha Re-release) ஆகிறது. அஜித்தின் பிறந்தநாள் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. மங்காத்தா பாக்ஸ் ஆபிஸில் நிச்சயம் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நடித்த கில்லி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 20ஆம் தேதி மீண்டும் வெளியானது. இப்படம் வெளியான நாளில் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளது. கில்லியின் வசூல் சாதனையை மங்காத்தா முறியடிக்கும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். வெங்கட் பிரபு விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அஜித்குமாரை வைத்து இயக்கிய படம் ரீ-ரிலீஸ் (Mankatha Re-release) ஆக உள்ளது. வெங்கட் பிரபு விஜய் மற்றும் அஜித் குமாரை வைத்து படம் தயாரிக்க விரும்பினார். ஆனால் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டதால் அந்த ஆசை நிறைவேற வாய்ப்பில்லை என்றாகிவிட்டது.

Latest Slideshows

Leave a Reply