சுனாமி, புயல் எச்சரிக்கை வழங்கும் National Data Buoy Program

2004ம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலைக்குப் பின்னர் கிழக்கு ஆசியாவில் எந்த நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி அச்சமும் ஏற்படுவதை தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. புயல் குறித்த அச்சம் காரணமாக நவம்பர் மாதம் வந்தாலே மக்கள் எந்த பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளது, எந்த பகுதியில் கரையைக் கடக்கும் என்பது குறித்து அவ்வப்போது, செய்தி அறிவிப்புகளை கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். இந்த சுனாமி, புயல்களை எப்படி விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள் மற்றும் எப்படி சுனாமி அச்சுறுத்தல் இல்லை என விஞ்ஞானிகளால் உறுதியாக கூற முடிகிறது என்பதற்கு தேசிய பெருங்கடல் ஆராய்ச்சிக் கழக (National Oceanographic Institute) விஞ்ஞானிகள் விடையளிக்கின்றனர்.

National Oceanographic Institute :

சென்னை பள்ளிக்கரணையில் National Oceanographic Institute உள்ளது. இந்த Institute ஆனது Ministry of Earth Science-ன் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றது. கடல் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை இந்த Institute மேற்காெண்டு வருவதுடன், கடலின் தன்மையில் ஏற்படும் மாற்றங்களையும், அதன் மூலம் வானிலை மாற்றம், புவியியல் மாற்றம், புயல், சுனாமி போன்றவை ஏற்படுவதையும், இந்த Institute ஆனது கண்காணித்து வருகின்றது.

சுனாமி, புயல் ஏற்படப் போகிறது என்றால் எச்சரிக்கை வழங்கும் National Data Buoy Program :

தேசிய தரவு மிதவை திட்டம் (National Data Buoy Program) என்ற கண்காணிப்பு அமைப்பு 1997ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த Program-ன் முதன்மை நோக்கம் இந்திய கடற்பகுதியில், Data Buoy-கள் எனப்படும் நங்கூரமிட்ட தரவு மிதவை கண்காணிப்பு அமைப்புகளை நிறுவி, அவற்றின் தகவல்களைப் பெற்று பராமரிப்பது ஆகும். அரபிக்கடல், வங்காள விரிகுடா கடல் பகுதியில் 12 ஆழ்கடல் பகுதிகள் மற்றும் 3 கடலோரப் பகுதிகளிலும் இக்கருவிகள் உள்ளன. இந்த Data Buoy தரவு மிதவைகளில் வானிலை மற்றும் கடலில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்கும் உணரிகள் (Censors) பொருத்தப்பட்டிருக்கும்.

2004ம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை கருவிகள் இல்லை :

ஆழ்கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை இந்த மிதவைகளில் (National Data Buoy Program) உள்ள சென்சார்கள் கண்டுபிடித்து சுனாமி ஏற்படப் போகிறது என்றால் எச்சரிக்கை வழங்கும். ஆழ்கடலில் சுமார் 4,000 மீட்டர் ஆழத்தில் தரைப்பகுதியில், நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளை உணரும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சுனாமி வந்த பின்னரும் தொடர்ந்து தரவுகளை வழங்கும். இதனைக் கொண்டு விஞ்ஞானிகள் எந்த பகுதியில் சுனாமி ஏற்படப் போகிறது. தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை கணிக்கின்றனர். புயல் எந்த இடத்தில், எந்த நேரத்தில் வரும் என்பதையும், அதன் தாக்கம் எந்தளவிற்கு இருக்கும் என்பதையும், எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை 3 நாட்களுக்கு முன்னதாகவே துல்லியமாகக் கூற முடியும்.

சுனாமியை கண்டறிவதற்கு வங்காள விரிகுடா பகுதியில் 5 இயந்திரங்களும், அரபிக்கடல் பகுதியில் 2 இயந்திரங்களும் நிலை நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் தரும் தகவல்களை பெற்று Indian National Center for Ocean Information Services நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து வானிலை மையத்திற்கும், பிற துறைகளுக்கும் தகவல்கள் வழங்கப்படும். 3 மணி நேரத்திற்கு ஒருமுறை ஆழ்கடலில் இருக்கும் இக்கருவிகளிலிருந்து தகவல்கள் கரையில் இருக்கும் கட்டுப்பாட்டு மையத்திற்கு செயற்கைக் கோள்கள் மூலம் அனுப்பப்படுகின்றன. இக்கருவிகள் கடலில் தடையின்றி செயல்படும் வகையில் 2 பேட்டரிகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை தயாரித்துக் கொள்ளும். ஒரு வேளை சூரிய ஒளி சோலார் பேட்டரிகள் இயங்காத பட்சத்தில் லித்தியம் அயன் பேட்டரி தானாகவே இயங்கத் துவங்கும். ஓராண்டு வரையிலும் இந்த பேட்டரிகள் இயங்கு நிலையில் இருக்கும்

Latest Slideshows

Leave a Reply