Air Taxi Service In India By 2026 : ‘இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ்’ திட்டமிட்டுள்ளது

இந்தியாவில் வான்வழி டாக்ஸி சேவையை ‘இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ்’ நிறுவனம் 2026ல் பயன்பாட்டுக்கு கொண்டு (Air Taxi Service In India By 2026) வர திட்டமிட்டுள்ளது :

இந்தியாவில் இனி மாநிலம் விட்டு மாநிலம் 7 நிமிடங்களில் போகலாம். இந்திய நகரங்களில் அதிகரித்து வரும் டிராபிக் பிரச்சனைக்கு தீர்வாக ஏர் டாக்ஸியை இண்டிகோ அறிமுகப்படுத்த உள்ளது. கார் டாக்ஸி, பைக் டாக்ஸி சேவைகளுக்கு மத்தியில் சுமார் 125 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 7 நிமிடங்களில் அடையும் வான் வழி டாக்ஸி திட்டமிடப்பட்டு வருகிறது.

அதன்படி, முதற்கட்டமாக டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் இருந்து ஹரியானாவின் குருகிராமிற்கு 125 கிலோ மீட்டர் தூரத்தை ஏழு நிமிடங்களில் கடக்கும் வான்வழி டாக்ஸியின் சேவை இயக்கப்படும். இதற்கு பயண கட்டணமாக பயணி ஒருவருக்கு ரூ.2,000 முதல் அதிகபட்சமாக ரூ.3,000 வரை வசூலிக்கப்பட உள்ளது.

இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி :

இந்தியாவின் டாப் விமான நிறுவனமாக இருக்கும் இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஆனது இந்தச் சேவையை வழங்குவதற்காக (Air Taxi Service In India By 2026) அமெரிக்காவின் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஏர் டாக்ஸி சேவையைத் தொடங்க உள்ளது. ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து கிட்டத்தட்ட 200 ‘மிட்நைட் டிரோன்’ விமானங்களை வாங்க இருக்கிறது. இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி மற்றும் முழுக்க முழுக்க மின்சார ஏர் டாக்ஸியாக இருக்கும். இந்த ஏர் டாக்ஸியால் செங்குத்தாகப் புறப்படவும் தரையிறங்கவும் முடியும். இந்த ஏர் டாக்ஸியில் ஒரு பைலட் மற்றும் 4 பயணிகள் என மொத்தம் 5 பேர் பயணிக்கலாம். சுமார் 161 கிலோமீட்டர்கள் வரை பயணிக் ஒரு முறை சார்ஜ் செய்தால் போதுமானது. முதற்கட்டமாக 200 விமானங்களுடன் தேசியத் தலைநகரான டெல்லி, நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பை மற்றும் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு பெங்களூர் ஆகிய நகரங்களில் இந்த சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

டெல்லியில் இந்த ஏர் டாக்ஸி மூலம் காரில் பயணிக்க எடுக்கும் 60 முதல் 90 நிமிடங்கள் தூரத்தை சுமார் 7 நிமிடங்களில் சென்றடைய முடியும். ஏர் டாக்ஸி கட்டணத்தை வழக்கமான டாக்ஸிகளுக்கு போட்டிப் போடும் வகையில் நிர்ணயம் செய்ய இண்டிகோ  திட்டமிட்டுள்ளது. இண்டிகோ இதில் மருத்துவம், அவசரக்கால பொருட்கள் ஆகியவற்றை Delivery செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல், மற்றும் உச்சத்தில்  இருக்கும் காற்று மாசு நிலையில், இந்த ஏர் டாக்ஸி அவை இரண்டிற்கும் ஒரு தீர்வாக இருக்கும்.  அதனால் இந்த ஏர் டாக்ஸிக்கு விரைவில் அனுமதியும் கிடைக்கும் மற்றும் வரும் 2026ஆம் ஆண்டில் இந்த சேவை (Air Taxi Service In India By 2026) ஆரம்பிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை- பெங்களூரு இடையேயும் இதேபோன்ற சேவை ஆனது அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Latest Slideshows

Leave a Reply