New Renault Duster : Renault நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டு New Renault Duster-ன் சிறப்பம்சங்கள்
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான Renault Duster இப்போது புத்தம் புதிய டிசைன் மற்றும் டெக்னாலஜி வசதிகளுடன் மீண்டும் வெளியாகிறது. முதல் முறையாக Compact SUV கார் வாங்க ஆசைப்படும் வாடிக்கையாளர்களுக்கு இந்த New Renault Duster ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இப்போது புத்தம் புதிய டிசைன் மற்றும் டெக்னாலஜி வசதிகளுடன் மீண்டும் இந்த New Renault Duster விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
New Renault Duster-ன் சிறப்பம்சங்கள் :
சர்வதேச அரங்கில் வெளியாகியுள்ள New Renault Duster ஒய் வடிவ டிசைன் அம்சங்கள் மாறாமல் rugged லுக்கிலும் அதே நேரம் புதிய alloy wheels-கள் உடன் மாற்றியமைக்கப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டஸ்டர் கார் 4.34மீட்டர் நீளமும், 1.81மீட்டர் அகலமும், 1.66மீட்டர் உயரமும், 2657மிமீ வீல் பேஸூம் கொண்ட காராக இருக்கும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸை பொருத்தவரை 4X2 வேரியண்டிற்கு 29 மிமீ அளவில் இருக்கும். 2 இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கும்.
- ஹைபிரிட் இன்ஜின் ஆப்ஷனை
- டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்
ஹைபிரிட் இன்ஜின் ஆப்ஷனில் 94 bhp பவரை கொண்ட 1.6 லிட்டர் 4 சிலிண்டர் Petrol engine பொருத்தப்படும். 49 bhp பவரை வெளிப்படுத்தும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார், எலெக்ட்ரிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்ட ஹைபிரிட் காராக விற்பனைக்கு வரும். டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் 130 bhp பவரை கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இருக்கும்.
- 10.1inch Infoinment system
- 7inch color Driver Display
- 6 Speakers கொண்ட 3D Sound system
- Wireless Charger
- Automatic AC
- Electronic Parking Brake System
- 5/7 Seaters ஆப்ஷன்.
- முழுமையாக மாற்றப்பட்ட Dashboard.
உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும்.
இந்தியாவிற்கு ஏத்த மாதிரி டிசைன் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும்
இந்தியாவில் இந்த புதிய டஸ்டர் கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் போது இந்தியாவிற்கு ஏத்த மாதிரி டிசைன் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விற்பனையில் இருந்த டஸ்டர் காரை விட இது சற்று டிசைன் மாறுபாடு செய்யப்பட்டு வெளியாகும் ஆனால் பார்க்க டஸ்டர் கார் லுக்கிலிருந்து பெரிய அளவில் மாறாத லுக்கில் தான் இருக்கும்.
தற்போது வெளியாகி உள்ள காருக்கும் இந்தியாவிற்கு வரப்போகும் காருக்கும் நிச்சயம் டிசைன் அளவில் வித்தியாசம் இருக்கும். முக்கியமாக இந்தியாவிற்கு இந்த கார் வரும்போது ரக்கட் rugged look-ல் இருக்கும். அதேபோல உட்புறத்தில் பயன்படுத்தப்பட்ட மெட்டீரியலும் இந்தியாவிற்கு வரும்போது வேறு விதமாக மாற வாய்ப்புகள் உள்ளன.
சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகமான இந்த டஸ்டர் காரில் அடாஸ் தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால் இந்த கார் இந்திய மார்க்கெட் வரும்போது அந்த தொழில்நுட்பம் இருக்குமா இல்லையா என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. இந்த New Renault Duster கார் 12 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Slideshows
- விவோ நிறுவனம் இன்று புதிய Vivo X200 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது
- Tamilnadu Alert App - தமிழக அரசின் Mobile App அறிமுகம்
- Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
- IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
- Interesting Facts About Bison : காட்டெருமை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
- 5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்
- Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
- Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
- Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்