Recovering Password / Username : அவசியம் அறிந்திருக்க வேண்டிய Username மற்றும் Password-ஜ மீட்டெடுப்பதற்கான வழி

இன்றைய காலகட்டத்தில்  நாம் எதற்கெடுத்தாலும் username  மற்றும் password-ஜ பயன்படுத்தும் கட்டாயத்தில் உள்ளோம். நாம் username  மற்றும் password-ஜ ஞபாகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய  அவசியம் உள்ளது.  நாம்  பயன்படுத்தும் எல்லா அக்கவுண்டுகளின் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டை மனதில் பதிய வைக்க முடியாது என்பதால் அவற்றை நம்பகமான இடத்தில் நாம் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.  அவ்வாறு  நாம் செய்ய தவறும் பட்சத்தில் அந்த username  மற்றும் password-ஜ (Recovering Password / Username)  மீட்டெடுப்பதற்கான வழிகளை நாம் நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

Universal Account Number

யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN – Universal Account Number) என்கிற 12 இலக்க எண் ஆனது அனைத்து தகுதி Employee Provident Fund  மற்றும் EPF அக்கவுண்டுகளை மேனேஜ் செய்வதற்காக மிக முக்கியமான தேவைப்படும் ஒரு எண் ஆகும். யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN – Universal Account Number) ஆனது அனைத்து தகுதி பெற்ற எம்ப்ளாயிகளுக்கும் EPFO மூலமாக வழங்கப்படுகிறது.  இதில் ஒரு குறிப்பிட்ட எம்ப்ளாயிக்கு பல்வேறு நிறுவனங்கள் வழங்கிய மெம்பர் IDகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும்  இடம் பெற்றிருக்கும்.

Provident Fund  அக்கவுண்டை சரிபார்க்க, EPF Claim சமர்ப்பிக்க அல்லது Provident Fund  அக்கவுண்ட் தொடர்பான எந்த ஒரு சேவையையும் பெறுவதற்கு இந்த 12 இலக்க UAN எண் முக்கியமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட  முக்கியத்துவம் வாய்ந்த UAN – ன் password-ஜ  இதேச் யாக நாம் மறக்கும் பட்சத்தில் அந்த UAN password-ஜ  மீட்டெடுப்பதற்கு எளிமையான செயல்முறை ஆனது உள்ளது.அல்லது நாம் ஈசியா புது UAN password-ஜ  மாற்றிக்கலாம்.

UAN - ன் password-ஜ மீட்டெடுப்பதற்கு உள்ள எளிமையான செயல்முறை :

  • EPF web சைட்டுக்கு செல்ல வேண்டும்.
  • UAN தொடர்பான சேவைகளுக்கு unifiedportal-mem.epfindia.gov.in. (EPFO UAN மெம்பர் போர்ட்டல்) லுக்கு செல்ல வேண்டும்.
  • Forgot Password -ஐ தேர்வு செய்ய  வேண்டும்.
  • EPFO UAN மெம்பர் போர்ட்டலுக்கு சென்றவுடன் ‘Forgot Password’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • UAN மற்றும் கேப்சாவை enter செய்ய வேண்டும்.
  • இப்பொழுது screen-னில் நம்முடைய UAN மற்றும் கேப்சா கோடை என்டர் செய்ய வேண்டும்.  இது  நம்முடைய அக்கவுண்டின் பாதுகாப்பை உறுதி செய்து, அதிகாரப்பூர்வமற்ற லாகின்களை தவிர்க்க உதவும்.
  • OTP ஐ verify செய்ய வேண்டும்.  
  • நம்முடைய UAN மற்றும் கேப்சாவை என்டர் செய்த பிறகு நமது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP (ஒன் டைம் பாஸ்வேர்ட்) பெறப்படும்.  நமது  அடையாளத்தை நிரூபிக்க இந்த OTP-ஐ என்டர் செய்ய வேண்டும்.
  •  Password-டை மாற்றி அமைக்க  வேண்டும்.
  • நம்முடைய அடையாளத்தை verify செய்த பிறகு நமது  Password மாற்றியமைக்க சொல்லி கேட்கப்படுவோம். அங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவுருக்களை பின்பற்றி நாம் புதிய மற்றும் வலிமையான ஒரு  Password-டை தேர்வு செய்ய வேண்டும்.
  •  புதிய Password பயன்படுத்தி login செய்ய வேண்டும்.
  • Password- வெற்றி கரமாக மாற்றி அமைத்த பிறகு புதிய பாஸ்வேர்டை என்டர் செய்து நம்முடைய  EPF அக்கவுண்டில் லாகின் செய்ய வேண்டும்.  நம்முடைய Password-டை பாதுகாப்பாக வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply