Next Indian Captain : இந்தியாவின் அடுத்த கேப்டன் சுப்மன் கில்

மும்பை :

நடப்பு ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் (Next Indian Captain) யார் என்பதை ரசிகர்கள் அடையாளம் கண்டுவிட்டதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு பிறகு ஹர்திக் பாண்டியா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக முதல் சீசனில் ஹர்திக் பாண்டியா கோப்பையை வென்றார். இரண்டாவது சீசனில் குஜராத் அணி இறுதி போட்டி வரை சென்றது.

இதனால் ஹர்திக் பாண்டியாதான் அடுத்த கேப்டனாக இருப்பார் என ரசிகர்கள் முடிவு செய்தனர். பொருத்தமாக, பிசிசிஐ சில தொடர்களுக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. முதலில் சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியா பின்னர் பல தவறுகளை செய்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோல்வியை பெற்றார். இதனையடுத்து ஹர்திக் பாண்டியா காயம் அடைந்து டி20 போட்டியில் இருந்து விலகினார். ஹர்திக் பாண்டியா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தாலும், இந்த தொடரிலும் அவர் மோசமாக செயல்படுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Next Indian Captain - சுரேஷ் ரெய்னா கணிப்பு :

இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா அடுத்த கேப்டனாவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதனையடுத்து இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதற்கு தற்போது சுரேஷ் ரெய்னா பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்திய அணியின் அடுத்த கேப்டனாக (Next Indian Captain) சுப்மன் கில் வர வாய்ப்பு உள்ளது. கேப்டனாக கில் சிறப்பாக செயல்படுகிறார், பேட்டிங்கிலும் அதிரடி காட்டுகிறார். 23 வயதான கில் தற்போதைய ஐபிஎல் தொடரில் இளம் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் 7 போட்டிகளில் 263 ரன்கள் குவித்துள்ளார். ஆனால், குஜராத் அணி 7 போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்து மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யார் வர வேண்டும் என்பது குறித்த உங்கள் கருத்துக்களை ரசிகர்களாகிய நீங்கள் கருத்துகளில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Latest Slideshows

Leave a Reply